அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

 
Noble-prize-for-Peace-2021

2021-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக  இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

From around the web