8 ஆண்டுகளாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண்... தற்போதைய நிலை என்ன? வெளியான ஆச்சரிய தகவல்

 
Argentina

அர்ஜென்டினா நாட்டில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் தானாகவே குணமடைந்த நிகழ்வு மருத்தவ குழுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வரை எந்த நாட்டிலும் எச்.ஐ.வி நோய்க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் அர்ஜென்டினா நாட்டில் ஒரு அதிசிய நிகழ்வு நடந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் எந்த வித சிகிச்சையும் பெறாமல் முழுமையாக நோயில் இருந்து தானாகவே குணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய மத்தியாஸ் லிட்சர்ஃபீல்ட் மற்றும் ஹார்வர்ட்  கூறுகையில், அவர் எச்.ஐ.வி நோயில் இருந்து முழுமையாக குணமானது எங்களுக்கே ஆச்சரியமாக தான் உள்ளது. முதலில் அவரது உடலில் இருந்து 1.2 பில்லியன் செல்களை எடுத்து ஆராய்ந்தோம்.

ஆனால் அவரிடம் எச்.ஐ.வி நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். குழந்தைக்கு எதாவது பாதிப்பு இருக்கிறதா? என்று அவரது தொப்புள் கொடி மூலம் நடத்தினோம்.

பல சோதனைகளின் இறுதியில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்ததற்கான அடையாளமே இல்லை. இவருக்கு முன்பு இதே போல் ஒருவர் மட்டுமே இப்படி குணமாகியுள்ளார். இது உலகளவில் 2வது கேஸ். இந்த கேஸ் எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

பொதுவாகவே இந்த வைரஸின் தாக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் தவிர குணப்படுத்த முடியாது. அவர்கள் சிகிச்சை மூலம் மேலும் சில ஆண்டுகள் வாழ நேரிடும். ஆனால் அவர்களை மரணப்பிடியில் இருந்து காப்பாற்ற முடியாது. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிகழ்வு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web