பாலத்தின் மீது தொங்கவிடப்பட்ட 9 மனித சடலங்கள்! மெக்சிகோவில் நடக்கும் பயங்கரம் !!

 
Mexico

மெக்ஸிக்கோவில் பாலத்தில் சுமார் 9 மனித சடலங்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் சகடெக்காஸ் மாநிலத்தில் இருக்கும் பாலம் ஒன்றில், கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 9 மனித உடல்கள் கயிற்றால் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் அந்த 9 உடல்களை கைப்பற்றியும், அருகில் இருந்த ஒரு சடலம் என மொத்தம் 10 சடலங்களை மீட்டு, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குற்றப்பிரிவுகளுக்கு இடையே நடந்து வரும் சண்டைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சகடெக்காஸ் மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாலத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சிலர் குவாஹ்டெமோக் வசிப்பவர்கள் என்று நம்பப்படுகிறது.

Mexico

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் சில சமயங்களில் தங்கள் எதிரிகளுடன் மோதிக்கொள்ளும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் இக்கொலைகள் அப்பகுதியில் செயல்படும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையிலான தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து அந்த நகரில் வசித்து வரும் குடியிருப்பாளர் கூறுகையில், எங்களுக்கு இது பயமாக இருக்கிறது. இரவில் தனியாக வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ளது. சீக்கிரமே தூங்கிவிட வேண்டும். இரவு நேரங்களில் அதிக சத்தம், அலறல் போன் விஷயங்கள் நடந்து வருவதாகவும் கூறினார்.

Mexico

குவாஹ்டெமோக்வில் இருந்து சுமார் 68 மைல் தொலைவில் உள்ள ஃப்ரெஸ்னிலோ நகரில் உள்ள ஒரு பாலத்தில் மூன்று உடல்கள் தொங்கிக் கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அடுத்து வியாழக்கிழமை இப்படி மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

போதைப் பொருள் விற்பனை விவகாரத்தில், இது போன்ற கொடூர மரணங்கள் மெக்ஸிக்கோவில் சமீபகாலங்களாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

From around the web