அமெரிக்காவில் சூப்பர மார்க்கெட்டில் புகுந்த 80 பேர் கூட்டாகக் கொள்ளை... வைரல் வீடியோ

 
California

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் தடாலடியாக புகுந்து கைகளில் கிடைத்த பொருட்களை திருடிவிட்டு கார்களில் தப்பிய 80 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வால்நட் க்ரீக்கில் பகுதியில் ஒரு நார்ட்ஸ்ட்ரோம் கண்ணாடிகளை உடைத்தவாறு கடையினுள் அடாவடியாக நுழைந்த 80 பேர், கைகளில் கிடைத்த பொருட்களை அள்ளிக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கார்களில் பறந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விரட்டிச் சென்று 3 பேரை கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

California

இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ லண்டன் ரேஸின் மேயர் மற்றும் காவல்துறைத் தலைவர் பில் ஸ்காட் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில், மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

"எதிர்வரும் காலங்களில் நாங்கள் இந்த பகுதியை காவல்துறையினரால் நிரப்புவோம். இன்று நீங்கள் சுற்றிச் செல்லும்போது யூனியன் சதுக்கத்தில் காவல்துறையைப் பார்க்கிறீர்கள், ஆனால் நாங்கள் யூனியன் சதுக்கத்தில் நிற்கப் போவதில்லை, ”என்று தலைமை ஸ்காட் கூறினார்.


 

From around the web