ஜெர்மனியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 60 ஆண்டுகால பாலம்..! வைரலாகும் வீடியோ

 
Germany

ஜெர்மனியில் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் ஒன்று வெடி வைத்து தகர்கப்பட்டது.

ஜெர்மனியின் வைஸ்பேடன் நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சல்ஸ்பச்டல் எனும் நெடுஞ்சாலை பாலம்.

தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் ரோலர் தாங்கி பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பாதுகாப்புக் காரணங்களால் ஜூன் 2020-ல் மூடப்பட்டது.

இதனையடுத்து, பழுதடைந்த பாலத்தை தகர்த்து விட்டு அங்கு புதிய பாலத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

பாலத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்படுவதற்கு முன்பே, அதனைச் சுற்றி 250 மீட்டர் எல்லைக்குள் இருந்து சுமார் 140 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.


பல மாதங்கள் திட்டமிட்டு, பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ரயில் பாதைகள் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் அருகிலுள்ள 750 துளைகள் போட்டு இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகளுக்காக தேடப்பட்டன.

இங்கு புதிய பாலம் கட்டப்படுவதற்கு முன், தொழிலாளர்கள் முதலில் சுமார் 15,000 டன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனெவே கட்டமைப்பின் தெற்குப் பகுதி தயாரான நிலையில், 2023-ம் ஆண்டு வரை பாலம் முழுவதுமாக திறக்கப்படாது, ஒட்டுமொத்தமாக 2026-ம் ஆண்டு இந்த கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web