இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை... எங்கே தெரியுமா..?

 
இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை... எங்கே தெரியுமா..?

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்திற்கு தடை வித்தித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவுடனான அனைத்து வகை போக்குவரத்தையும் ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை வித்துள்ளது. மேலும், அவ்வாறு தடையை மீறி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் இந்த விதிமுறை பொறுத்தும்.

மேலும், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிற நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை அல்லது 38 லட்ச ரூபாய் அபராதம் அல்லது சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹீர் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வந்தால் சிறை தண்டனை விதிப்போம் என்று சொந்த நாட்டினருக்கே ஆஸ்திரேலிய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்ற சில ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திலியாவுக்கு செல்லாமல், இந்தியாவில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web