நார்வேயில் வில்லேந்தி வந்தவன் அம்பு எய்ததில் 5 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

 
Norway

நார்வேயில் கோங்க்ஸ்பர்க் நகரில் வில்லுடன் வந்த ஒருவன் அம்புகளை எய்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை நோக்கி அம்புகள் எய்தி தாக்கியுள்ளான். மேலும், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த  தாக்குதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்டவன் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அவன் கோங்க்ஸ்பர்க் நகரில் குடியிருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுவாக நார்வேயில் காவல்துறையினர் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. இந்தத் தாக்குதலையடுத்துக் காவல்துறையினர் ஆயும் ஏந்தி நிற்கப் பணிக்கப்பட்டுள்ளது.

From around the web