70 ஆண்டுகளில் பாதிரியார்களால் 2.16 லட்சம் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

 
François-Devaux

பிரான்சில் 70 ஆண்டுகளில் பாதிரியார்களால் 2 லட்சம் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலய பாதிரியர்கள் பலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018-ம் ஆண்டு பல்வேறு புகார்கள் எழுந்தன. பல நாடுகளில் பாதிரியர்களுக்கு எதிராக பாலியல் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் பாதிரியார்கள் மற்றும் தேவாலய ஊழியர்களால் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி 2,500-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட முழு அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2.16 லட்சம் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலனோர் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே இது குறித்து கூறுகையில், தேவாலயத்தின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3.30 லட்சமாக உயரும் என்று குறிப்பிட்டார்.

From around the web