லண்டனில் நேற்றிரவு குத்திக் கொல்லப்பட்ட 16 வயது பிரித்தானிய சீக்கியர்! சற்று முன்பு வெளியான புகைப்படம்

 
Ashmeet-Singh

லண்டனில் 16 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டு கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த கத்தி குத்து சம்பவத்தால் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு மேற்கு லண்டனின் சவுத்ஹாலில் உள்ள குடியிருப்பு தெருவில், அடையாளம் தெரியாத இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தான். அதன்பின் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், நேற்றிரவு சரியாக இரவு 9.07 மணிக்கு போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவ குழுவுடன் போலீசார் விரைந்துள்ளனர்.

Southall

ஆனால், அந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மேலும், நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயர் அஷ்மீத் சிங் எனவும், அவருக்கு 16 வயது ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிறுவனின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
 
கடந்த 2008-ம் ஆண்டு லண்டனில் பதின்மவயதினர் 29 பேர் இது போன்ற சம்பவங்களால் கொலை செய்யப்பட்டனர். அதே போன்று இந்த ஆண்டு தற்போது 28 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web