அடேங்கப்பா! கொரோனா வைரஸில் இத்தனை ரகமா? தடுப்பூசி துணையுடன் விரட்டியடிப்போம்!!

 
Covid-19

உலகெங்கும் கோர தாண்டாவம் ஆடும் கொரோனா வைரஸில் இத்தனை வகைகள் உள்ளதா?. அதைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம். சீனாவில் துவங்கிய வைரஸானது உலகெங்கும் பரவத் தொடங்கியது மட்டுமல்லாமல், உடலில் பல்கி பெருகும் போது தன்னை தானே உருமாற்றியும் கொண்டது. அப்படி உருமாறும் போது சில வகைகள் வேகமாக பரவினாலும் பெருமளவில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும் சில வகைகள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஆல்பா ( இங்கிலாந்து , செப்டம்பர் 2020), பீட்டா ( தெற்கு ஆப்ரிக்கா, மே 2020), காமா (பிரேசில், நவம்பர் 2020), டெல்டா ( இந்தியா, அக்டோபர் 2020) தான் அதிக உயிர் சேதம் ஏற்படுத்திய வகைகளாகும். 

அடுத்ததாக இரண்டு வைரஸ் வகைகள் கவனிக்கத்தக்க இடத்தில் உள்ளன. லாம்டா ( பெரு, டிசம்பர் 2020), மூ ( கொலம்பியா, ஜனவரி 2021), என்ற இந்த இரண்டு வைரஸ்களும் வருங்காலத்தில் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் ஆறு வகையான வைரஸ்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளன. அவை AZ.5 ( பல நாடுகள், ஜனவரி 2021), C.1.2 ( தெற்கு ஆப்பிரிக்கா, மே 2021), B.1.617.1 ( இந்தியா, அக்டோபர் 2020), B.1.526 ( அமெரிக்கா, நவம்பர் 2020), B.1.525 (பல நாடுகள், டிசம்பர் 2020), B.1.630 ( டொமினிக் குடியரசு, மார்ச் 2021). இந்த ஆறு வகை வெரஸ்களின் பரவும் வேகம் மற்றும் பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த வைரஸின் பிரிவுகள் மாற்றப்படலாம். 

எனினும் தடுப்பிசியில் எம்ஆர்என்ஏ வை பயன்படுத்தும் மொடோர்னா, பைசர் நிறவனங்கள் இந்த எல்லா வகை வைரஸ்களுக்கும் தங்கள் தடுப்பூசி பயன் தருவதாக தெரிவித்துள்ளன. இந்த பட்டியலை உலக சுகாதார அமைப்பு இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 

அனைவரும் தடுப்பூசி பெறுவோம். இந்த வைரஸினை விரட்டியடிப்போம். தொடர்ந்து முகக்கவசம், சானிட்டைசர் உபயோகப் படுத்துவோம்

– பிரேம் ஆனந்த், மருத்துவ ஆராய்ச்சியாளர், கான்சஸ், யு.எஸ்.ஏ.

From around the web