15 டாலர்கள்! குறைந்த பட்ச ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்தார் அதிபர் பைடன்!!

 
15 டாலர்கள்! குறைந்த பட்ச ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்தார் அதிபர் பைடன்!!

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை பார்ப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய அதிபர் பைடன், அமெரிக்காவின் குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு 15 டாலராக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதிபராகப் பதவியேற்ற 100 வது நாள் நிறைவு செய்வதையொட்டி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார் அதிபர் பைடன். அப்போது 100 நாள் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அடுத்தடுத்த திட்டங்களையும் எடுத்துக்கூறி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரினார்.

தற்போது அமெரிக்காவில் குறைந்த பட்ச ஊதியம் 7 டாலர்கள் 25 சென்ட்களாக உள்ளது. இதை 15 டாலர்களாக உயர்த்த வேண்டும் என்று அதிபர் பைடன் அறிவித்துள்ளார். அதிபர் பைடனின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கான சட்டவரைவு இயற்றப்பட்டு நிறைவேற்றப்படும் போது அமலுக்கு வந்து விடும்.

From around the web