நிலவில் சந்திரயான் 2 – நாசா முன்னாள் விண்வெளி வீரர் தகவல் !

கோயமுத்தூர்: நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 2 இறங்கும் செப்டம்பர் 7ம் தேதியை உலகமே உற்று நோக்குவதாக நாசா முன்னாள் விண்வெளி வீரர் டொனால்ட் ஏ தாமஸ் கூறியுள்ளார். கோயமுத்தூர் அருகே பார்க் பொறியில் கல்லூரி விழாவில் பங்கேற்ற டொனால்ட் தாமஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த விண்கலமும் இறங்கியதில்லை. முதன் முதலாக நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 இறங்கப் போவதை உலகமே உற்று நோக்குறது. இன்னும் 5 ஆண்டுகளில் இதே
 

கோயமுத்தூர்: நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 2 இறங்கும் செப்டம்பர் 7ம் தேதியை உலகமே உற்று நோக்குவதாக நாசா முன்னாள் விண்வெளி வீரர் டொனால்ட் ஏ தாமஸ் கூறியுள்ளார்.

கோயமுத்தூர் அருகே பார்க் பொறியில் கல்லூரி விழாவில் பங்கேற்ற டொனால்ட் தாமஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,  “நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த விண்கலமும் இறங்கியதில்லை. முதன் முதலாக நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 இறங்கப் போவதை உலகமே உற்று நோக்குறது. இன்னும் 5 ஆண்டுகளில் இதே பகுதிக்கு நாசா வும் விண்கலம் அனுப்ப உள்ளது.

நிலவின் தென்பகுதியில் உறைபனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறைபனி இருந்தால் அங்கே நீர் இருக்கும். அதனால் ஆக்சிஜனும் , ஹைட்ரஜனும் இருக்கும். ஆனாலும் நிலவில் மனிதன் வாழ்வது மிகவும் சிரமமானது. பகலில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இரவில் 100 டிகிரி செல்சியஸ் குளிரும் நிலவில் இருக்கும். மேலும் நிறைய கதிர்வீச்சுகளும் உண்டு,” என்று கூறினார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் மென்மையாக இறங்கும் முயற்சியில் இந்தியாவின் சந்திரயான் 2 அனுப்பப் பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி இந்தியா மட்டுமல்ல உலகமே சந்திரயான் 2 -ன் சாதனையை எதிர்நோக்கி உள்ளது.

 

From around the web