கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் தாராவி! உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக முக்கியமானது உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான மகாராஷ்டிரா மும்பையில் இருக்கும் தாராவி பகுதி. இந்தியாவில் தற்போது மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகர்ப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் காரணமாக அதிகளவில் பாதிப்பு இருக்கிறது.
 

கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் தாராவி! உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக முக்கியமானது உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான மகாராஷ்டிரா மும்பையில் இருக்கும் தாராவி பகுதி.

இந்தியாவில் தற்போது மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகர்ப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் காரணமாக அதிகளவில் பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தாராவி ஆகியவை நமக்குக் காட்டியுள்ளன’ என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web