உலக சுகாதார மைய வல்லுனர் குழு சீனா செல்கிறது!

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அனைத்து உலக நாடுகளையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. வூகானில் உள்ள இறைச்சி சந்தையில் தான் கொரோனா முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. கொரோனா வைரஸ் வூகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என அமெரிக்கா நேரடியாக சீனாவை குற்றம் சாட்டியது. அமெரிக்க படை வீரர்கள் மூலமே சீனாவில் கொண்டு வந்து விடப் பட்டதாக சீனா குற்றம் சுமத்துகிறது. இந்நிலையில் கொரோனா வைரசின்
 

உலக சுகாதார மைய வல்லுனர் குழு சீனா செல்கிறது!டந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அனைத்து உலக நாடுகளையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. வூகானில் உள்ள இறைச்சி சந்தையில் தான் கொரோனா முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

கொரோனா வைரஸ் வூகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என அமெரிக்கா நேரடியாக சீனாவை குற்றம் சாட்டியது. அமெரிக்க படை வீரர்கள் மூலமே சீனாவில் கொண்டு வந்து விடப் பட்டதாக சீனா குற்றம் சுமத்துகிறது. இந்நிலையில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்தவும், ஆய்வறிக்கை மேற்கொள்ளவும் உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலக சுகாதார மையம் சார்பில், வல்லுனர் குழு ஒன்றை சீனா அனுப்ப இருக்கிறது. இந்த வைரசை ஒழிப்பதற்கான மருந்தை முடிவு செய்வதற்கு முன் அதன் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1 கோடி பேருக்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் அசாதாரண நிலைக்கு உலகம் தள்ளப்பட்டு விட்ட நிலையில் அதன் மூலத்தை முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதற்காகவே இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

A1TamilNews.com

From around the web