கேப்டன் கபில்தேவ் தலைமையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்!

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நாள் இதே ஜூன் 25. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கினார்கள். 2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.
 

கேப்டன் கபில்தேவ் தலைமையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்!1983ம் ஆண்டு  கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நாள் இதே ஜூன் 25.

இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கினார்கள்.

2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்து இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசைகட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கியது. 76 ரன்னுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது இந்திய அணி.

140 ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணிஆல் அவுட் ஆனது. அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நாள் இன்று.

A1TamilNews.com

From around the web