2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்! கூகுள் அதிரடி அறிவிப்பு!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. வீட்டிலிருந்தே பணிபுரிய சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால செயல்பாடுகளை திட்டமிட்டுவதற்காக, வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி நீட்டிக்கப்படுகிறது. அலுவலகம் வந்து வேலை
 

2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்! கூகுள் அதிரடி அறிவிப்பு!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.

உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. வீட்டிலிருந்தே பணிபுரிய சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன.

அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால செயல்பாடுகளை திட்டமிட்டுவதற்காக, வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி நீட்டிக்கப்படுகிறது.

அலுவலகம் வந்து வேலை பார்க்கும் அவசியமில்லாத பொறுப்புகளில் இருப்பவர்கள் 2021ஜூன் 30வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இரண்டு லட்சம் கூகுள் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என கூகுள் நிறுவனத்தின் சிஈஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web