பெண் எனும் சொல் – மகளிர் தின கவிதை

மொழியின் புகழ் நிறைத்தது இன்பச் சொல் உலகில் நிகர் இல்லாவொரு அன்பின் சொல் அறிவின் கூர்மை மிரட்டும் வயிரச் சொல் ஒளியின் வளம் கொடுத்த இளமைச் சொல் உளியின் நுட்பம் கொண்ட கலைச் சொல் நதியின் தேடல் அமைந்த எழிற் சொல் என்றும் திண்மை வழியும் அறச்சொல் எதற்கும் துணிவை நம்பும் இன்சொல் பாரதி வாழ்த்திப் பாடிய தீஞ்சொல் பெரியார் போராடித் தீட்டிய தீச்சொல் சாத்திரம் உடைத்து எழுந்த சரித்திரச் சொல் அடிமை வே(வ)லியினை அறுத்த வாற்சொல்
 

பெண் எனும் சொல் – மகளிர் தின கவிதை

மொழியின் புகழ் நிறைத்தது
இன்பச் சொல்
உலகில் நிகர் இல்லாவொரு
அன்பின் சொல்
அறிவின் கூர்மை மிரட்டும்
வயிரச் சொல்
ஒளியின் வளம் கொடுத்த
இளமைச் சொல்
உளியின் நுட்பம் கொண்ட
கலைச் சொல்
நதியின் தேடல் அமைந்த
எழிற் சொல்
என்றும் திண்மை வழியும்
அறச்சொல்
எதற்கும் துணிவை நம்பும்
இன்சொல்
பாரதி வாழ்த்திப் பாடிய
தீஞ்சொல்
பெரியார் போராடித் தீட்டிய
தீச்சொல்
சாத்திரம் உடைத்து எழுந்த
சரித்திரச் சொல்
அடிமை வே(வ)லியினை அறுத்த
வாற்சொல்
எட்டுத்திக்கும் காற்றென மணக்கும்
சுவைச்சொல்
அனல் போல தீமை அழிக்கும்
தழற்சொல்
அருவியெனக் குளுமை தரும்
பண்சொல்
மண்ணின் பெருமை காக்கும்
மலர்ச்சொல்
அகத்தில் உண்மை ஒளிரும்
தேன்சொல்
உயிரள்ளித் தந்திடும் தூய
உயிர்ச்சொல்
உயிர்கள் மொத்தமும் வணங்கும்
தனிச்சொல்
உலகம் இயக்கும் உயிர்களுக்கு
ஒருசொல்
மொழிகள் மொத்தமும் மயங்கும்
தனிச்சொல்
” பெண்”

இப்படியொரு திறமிகு சொல்…
இதுபோலொரு
உயிர்புகும் ஒரு சொல்…
உயிரினிக்கும் ஒரே சொல்
இவ்வுலகில் இல்லையென்று
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே
பெண்ணொளி வாழ்கவென்று
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே

– முனைவர்.சித்ரா மகேஷ்

http://www.A1TamilNews.com

From around the web