அமெரிக்காவில் அவதரித்த நிஜ சிங்கப்பெண்!

நியூயார்க்: அமெரிக்காவின் வன உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் பொறுப்பில்லாமல் உயிரை பணயம் வைத்து தடுப்புகளை மீறி சிங்கத்தின் அருகில் சென்றுள்ளார். அவர் மீது நியூயார்க் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். நியூயார்க்கில் உள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் தடுப்புச்சுவர் இருந்துபோதும், பெண் ஒருவர் அதைத் தாண்டி அங்கிருந்த சிங்கத்தின் அருகில் நெருங்கிச் சென்றார். ஹாய் என்று சிங்கத்திடம் கையசைத்த அந்தப் பெண், லேசான நடனமும் ஆடினார். அப்போது சிங்கம் ஒரு காலை முன்வைத்த போது
 

நியூயார்க்: அமெரிக்காவின் வன உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் பொறுப்பில்லாமல் உயிரை பணயம் வைத்து தடுப்புகளை மீறி சிங்கத்தின் அருகில் சென்றுள்ளார். அவர் மீது நியூயார்க் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் தடுப்புச்சுவர் இருந்துபோதும், பெண் ஒருவர் அதைத் தாண்டி அங்கிருந்த சிங்கத்தின் அருகில் நெருங்கிச் சென்றார். ஹாய் என்று சிங்கத்திடம் கையசைத்த அந்தப் பெண், லேசான நடனமும் ஆடினார்.

அப்போது சிங்கம் ஒரு காலை முன்வைத்த போது BABY I LOVE YOU என்று அந்தப் பெண் கூறி சிங்கத்திடம் பேசினார். உயிரியில் பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர் ஒருவர் அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பூங்கா அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

அமெரிக்காவில் அவதரித்த நிஜ சிங்கப்பெண்!

மற்றுமொரு வீடியோவில்  ஜிராஃபி பூங்காவுக்குள் போய் நடனடமாடியும் உள்ளார். ப்ரான்க்ஸ் உயிரியல் பூங்கா அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறையிடம் கிரிமினல் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு நியூயார்க் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கிரிமினல் குற்றத்திற்காக, கைது செய்வதற்கு தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

 

 

 

From around the web