டிக்கெட் இல்லாமல் விமானத்தில் ஏறிய பலே பெண்மணி! அமெரிக்காவில் பரபரப்பு..

ஒர்லாண்டோ: அமெரிக்க விமானத்தில் டிக்கெட் இல்லாமல் ஏறி சீட்டில் அமர்ந்து ரகளை செய்த பெண்மணியை விமான ஊழியர்கள் இறக்கி விட்டுள்ளனர். ஒர்லாண்டோவிலிருந்து அட்லாண்டா செல்லும் டெல்டா விமானத்தில் குறிப்பிட்ட இருக்கையில் சில்வியா ரிக்டர் என்ற பெண்மணி அமர்ந்து இருந்தார். விமானத்திற்குள் வந்த மற்றுமொரு பெண்மணியான ஜெனி க்ளெமன்ஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சில்வியா அமர்ந்து இருப்பதைப் பார்த்துள்ளார். பொறுமையாக, இந்த இருக்கை எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் மாற
 

டிக்கெட் இல்லாமல் விமானத்தில் ஏறிய பலே பெண்மணி! அமெரிக்காவில் பரபரப்பு..ஒர்லாண்டோ:  அமெரிக்க விமானத்தில் டிக்கெட் இல்லாமல் ஏறி சீட்டில் அமர்ந்து ரகளை செய்த பெண்மணியை விமான ஊழியர்கள் இறக்கி விட்டுள்ளனர்.

ஒர்லாண்டோவிலிருந்து அட்லாண்டா செல்லும் டெல்டா விமானத்தில் குறிப்பிட்ட இருக்கையில் சில்வியா ரிக்டர் என்ற பெண்மணி அமர்ந்து இருந்தார். விமானத்திற்குள் வந்த மற்றுமொரு பெண்மணியான ஜெனி க்ளெமன்ஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சில்வியா அமர்ந்து இருப்பதைப் பார்த்துள்ளார்.

பொறுமையாக, இந்த இருக்கை எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் மாற மாட்டேன் என்று  மறுத்துள்ளார். பின்னர் விமான ஊழியர்கள் தலையிட்டு இந்த இருக்கை ஜெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த சில்வியா இருக்கை எண் 15 ஏ கொடுக்கப்பட்டுள்ளது, நான் போக மாட்டேன் என்று ஆவேசப்பட்டுள்ளார். ஒரு வேளை வேறு விமானமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பயணிகள் பதிவேட்டைப் பார்த்ததில் சில்வியாவின் பெயரும் இல்லை. உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்ற போது செல்ஃபோனில் எடுத்த செல்ஃபி படத்தைக் காட்டியுள்ளார் சில்வியா. 

அரசு அடையாள அட்டை வேண்டும் என்று கேட்கவே, “நான் கார் ஓட்டுவதில்லை, என்னுடைய ட்ரைவிங் லைசென்ஸ் அட்லாண்டா வீட்டில் உள்ளது” என்று கூறியிருக்கிறார். விமானத்திற்குள் ஏறுவதற்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டும் இல்லை. கேட்டதற்கு அதை கிழித்து எறிந்து விட்டதாக சொல்லியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மற்ற சில ஊழியர்களும் விரைந்து வந்து சில்வியாவை விமானத்தை விட்டு இறக்கி விட்டுள்ளனர். போலீசார் சில்வியாவை விமான நிலையத்திற்கு வெளியே அனுப்பி வைத்துள்ளனர். அவரை கைது செய்யவோ மேலதிக விசாரணையோ நடத்தப்பட வில்லை.

சோதனை அதிகாரிகள் தரப்பில், சில்வியா சோதனை செய்யப்பட்டார் என்று கூறியுள்ளனர். ஆனால் கூடுதல் தகவல்களை பகிரவில்லை.அடையாள அட்டை, விமானப் பயண டிக்கெட் இல்லாமல் எப்படி பாதுகாவலர்களைக் கடந்து, விமானப் பணியாளர்களையும் கடந்து விமானத்திற்குள் ஏறி அமர்ந்தார் என்று கேள்விகள் எழுந்துள்ளன. இது எப்படி நடந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எஃப்பிஐ-க்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டு நுழைவுச் சீட்டையும் சரிபார்த்த பின்னரே, விமானம் அட்லாண்டாவுக்கு புறப்பட்டுச் சென்றது.  

 

From around the web