வி.பி.துரைசாமியால் திமுகவிற்கான வாக்குகள் பாதிக்குமா? பேசப்படும் அளவிற்கு பாஜக-வில் வளர்வாரா?

முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். திமுக என்பது இலட்சக்கணக்கான உறுப்பினர்களையும், ஆயிரங்கணக்கான நிருவாகிகளையும் கொண்ட ஒரு மாபெரும் இயக்கம். இதில் எல்லா சமயத்திலும், எல்லா விதத்திலும் எல்லோரையும் திருப்தி படுத்துவதென்பது தலைமைக்கு இயலாத காரியம். அதனால் பிணக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படி பிணக்கு ஏற்பட்டு விலகி செல்பவர்கள் அத்தனை பேருமே, “தலைமை எங்களை மதிக்கவில்லை, சர்வாதிகார போக்காக நடந்துக் கொள்கிறது” என்று பழி சொல்வதும் இயல்பே. வைகோ முதற்கொண்டு சமீபத்தில் பழ.கருப்பையா, ராதாரவி வரை இதே
 

வி.பி.துரைசாமியால்  திமுகவிற்கான வாக்குகள் பாதிக்குமா? பேசப்படும் அளவிற்கு பாஜக-வில் வளர்வாரா?முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். திமுக என்பது இலட்சக்கணக்கான உறுப்பினர்களையும், ஆயிரங்கணக்கான நிருவாகிகளையும் கொண்ட ஒரு மாபெரும் இயக்கம். இதில் எல்லா சமயத்திலும், எல்லா விதத்திலும் எல்லோரையும் திருப்தி படுத்துவதென்பது தலைமைக்கு இயலாத காரியம்.

அதனால் பிணக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படி பிணக்கு ஏற்பட்டு விலகி செல்பவர்கள் அத்தனை பேருமே, “தலைமை எங்களை மதிக்கவில்லை, சர்வாதிகார போக்காக நடந்துக் கொள்கிறது” என்று பழி சொல்வதும் இயல்பே. வைகோ முதற்கொண்டு சமீபத்தில் பழ.கருப்பையா, ராதாரவி வரை இதே டெம்ப்ளேட் தான்.. இப்போ இதே டெம்ப்ளேட் அப்படியே வி.பி.துரைசாமிக்கும் பொருந்தும். இதில் சாதி என்பதெல்லாம் அறவே இல்லை.

அதாவது வி.பி.துரைசாமி அருந்ததியர் என்பதால், தலித் என்பதால் அவமதிக்கப்படுகிறார், புறக்கணிக்கப்பட்டார் என்ற வாதங்கள் எல்லாம் திமுகவுக்கு எதிரான விஷமிகளால் பதியப்படும், பரப்பப்படும் கருத்துகள். இதில் துளியும் உண்மை இல்லை.

அதே போல வி.பி.துரைசாமியின் இந்த சம்பவத்தை, “இவர்களுக்கு நன்றி இல்லை, நன்றி கெட்டவர்கள்” என்று தலித்களுக்கு எதிராக கட்டமைக்கப்படும், பரப்பப்படும் செயல்களும் அதே விஷமத்தனமானதே.

இப்போ கேள்விக்குள் வருகிறேன். காலகாலமாக அருந்ததியர் ஓட்டுகள் என்றாலே அது ‘அதிமுக’விற்குதான் என்ற ஒரு கருத்து எப்பவும் இங்கே நிலவும். அது உண்மைதான் எம்.ஜி.ஆருக்காக அந்த சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்கு சென்றதுதான். ஆனால் கலைஞர் கொண்டுவந்த அருந்ததியர் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டிற்கு பிறகு, அருந்ததியர் சமூகத்தின் வளர்ச்சிக்கென்று பிரத்தியேகமாக எழுந்த இயக்கங்களை அடுத்து இந்த நிலை இப்போது மாறி பெரும்பான்மை அருந்ததியர் சமூக வாக்குகள் திமுகவை நோக்கி வந்திருக்கிறது.

இடஒதுக்கீடு தந்த கலைஞருக்கு பகுத்தறிவாலையம் கட்டுவது, தங்கள் குழந்தைகளுக்கு அன்பழகன், கருணாநிதி என்று பெயர்களை சூட்டுவது என்பதிலிருந்து அருந்ததியர் சமூகத்தினரின் திமுக சார்பை உணர்ந்துகொள்ளலாம்.

அதுமட்டுமின்றி அதியமானின் ஆதித்தமிழர் பேரவை, கு.ஜக்கையனின் ஆதித்தமிழர் கட்சி, நாகை.திருவள்ளுவனின் தமிழ்புலிகள் கட்சி என்று அனைத்து அருந்ததியர் இயக்கங்களும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை நேரடியாக ஆதரித்து களம் கண்டன. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி பார்ப்பனியம், இந்துத்துவத்திற்கு எதிரான அருந்ததியர் சமூகம் சார்ந்த முற்போக்குவாதிகளும், அம்பேத்கரிஸ்ட்களும் நேரடியாக, வெளிப்படையாக இன்று திமுகவை ஆதரிக்கின்றனர் என்பதையும் பதிவு செய்கிறேன்.

ஆக, வி.பி.துரைசாமியின் பாஜக விஜயத்தால் அருந்ததியர் சமூகத்தினருக்கும் பாதிப்பில்லை, திமுகவிற்கும் பாதிப்பில்லை.

தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகனே இந்த ரெண்டு மாசத்துல இந்த ரெண்டு நாளாதான் பேசப்படுறார்.. நாளையில் இருந்து பழையப்படி அவுட் ஆஃப் ஃபோக்கஸ் தான்.

மற்றபடி தமிழக பாஜகவின் முதல் தலித் தலைவர் டாக்டர் கிருபாநிதி எந்தளவுக்கு பேசப்பட்டாரோ, நடத்தப்பட்டாரோ அந்தளவிற்கு முருகனும், துரைசாமியும் வருங்காலத்தில் கட்டாயம் பேசப்படுவார்கள், நடத்தப்படுவார்கள்.

– கோபிநாத் குபேந்திரன்

A1TamilNews.com

From around the web