இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா?அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல்!

உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 2018ல் இந்தியா ரஷியாவுடன் S400 வகையான ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷியாவிடம் ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் என எச்சரித்துள்ளது. ராணுவத் தளவாடங்களை விற்கும் பணத்தில் ரஷியா மற்ற நாடுகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாலேயே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. தற்போது இந்தியா ரஷியாவுடன் ராணுவத்
 

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா?அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல்!லக நாடுகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 2018ல் இந்தியா ரஷியாவுடன் S400 வகையான ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் என எச்சரித்துள்ளது.

ராணுவத் தளவாடங்களை விற்கும் பணத்தில் ரஷியா மற்ற நாடுகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாலேயே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

தற்போது இந்தியா ரஷியாவுடன் ராணுவத் தளவாடக் கொள்முதல் செய்யும் பட்சத்தில் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கும் என அச்சுறுத்தியுள்ளது.

ரஷியாவை விட நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய ராணுவத் தளவாடங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாலும், தேவைப்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி காணொலிக் காட்சி வாயிலாக அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web