நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா? மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா முழுவதும் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் +2 முடித்து மருத்துவ படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இன்னும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி
 

நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா? மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!ந்தியா முழுவதும் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் +2 முடித்து மருத்துவ படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இன்னும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களில் சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக தற்போது உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரணச் சூழல் காரணமாக மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வைத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அம்மாணவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது.

‘மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது கொரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது ? என மருத்துவக் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியதுடன் ,இது தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web