தமிழகத்தில் ஜூன் 1 முதல் கோயில்கள் திறக்கப்படுமா?  தமிழக அரசு விளக்கம்!

கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், தியேட்டர்கள், கடற்கரை, பூங்காக்கள்,வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 40000 கோயில்களில் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் கடந்த இரண்டு தினங்களாக
 

தமிழகத்தில் ஜூன் 1 முதல் கோயில்கள் திறக்கப்படுமா?  தமிழக அரசு விளக்கம்!கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர் ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், தியேட்டர்கள், கடற்கரை, பூங்காக்கள்,வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 40000 கோயில்களில் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் கடந்த இரண்டு தினங்களாக வாட்ஸ்-அப்களில் வல ம் வந்துக் கொண்டிருக்கின்றன.

கோயில்களுக்கு வரும் பக்தர்கள்  அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கோயில்கள் வாயிலில் தீவிர உடல் வெப்பப் பரிசோதனை செய்தப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்கு உள்ளேயும்  சமூக விலகலைக் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

காலை மாலை வேளைகளில் கோயில்கள் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதிக்க இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையினரிடம் இருந்து இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்றும் தமிழக அரசு, இது பற்றி பரிசீலனையில் தான் இருக்கிறது என்றும், இது உறுதி செய்யப்படாத தகவல் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

A1TamilNews.com

From around the web