செப்டம்பரில் சசிகலா விடுதலை? புதிய தகவல்கள்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா செப்டம்பர் மாதம் விடுதலையாவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடைக்கப் பட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், 2014-ம் ஆண்டு 24 நாட்கள்
 

செப்டம்பரில் சசிகலா விடுதலை? புதிய தகவல்கள்!!சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா செப்டம்பர் மாதம் விடுதலையாவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடைக்கப் பட்டுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையிலும் மொத்தம் 37 நாட்கள் இருந்துள்ளார். அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும்.
 
மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டணை கைதிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையும் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 

இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தால் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனையி, 4 மாதங்கள் கழிக்கப்படும். ஏற்கனவே சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தது என 5 மாதங்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே பார்த்தால் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வாக்கில் சசிகலா விடுதலை ஆவார் என்று கருதப்படுகிறது.

இதைத் தவிர, நன்னடத்தை அடிப்படையில்  2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைப்பதற்கு சிறை கண்காணிப்பாளர் அதிகாரம் உள்ளது. அப்படி வழங்கப்பட்டால் ஜூலை மாதமே சசிகலா விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

 
 
ஆனால் நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்று சிறைத்துறை உயர் அதிகாரியாக இருந்த மேக்ரிக் கூறியுள்ளார். பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுகின்றன. ஆனாலும், விடுமுறை நாட்கள், ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் அடிப்படையில் செப்டம்பர் மாதம் சசிகலா நிச்சயம் விடுதலை ஆவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
 
மேலும், சசிகலாவுக்கு  கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அந்த அபராதத்தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும். மற்ற நடைமுறைகளை செயல்படுத்திய பிறகு அபராதத் தொகையை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
 

From around the web