24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகளைத் தாண்டுமா 2.0? #2Point0Teaser #Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பட டீசர் வந்துவிட்டது. ஷங்கரின் பிரமாண்ட கற்பனையின் ஒரு சின்ன துணுக்கை சாம்பிள் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். ஆன்லைனில் அனைத்து தளங்களிலும் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது 2.0 பட டீசர். தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே இந்த டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் வெளியாகி 10 மணி நேரம் ஆகியிருக்கிறது. அதற்குள் மூன்று மொழிகளிலும் சேர்த்து 20 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது இந்த டீசருக்கு.
 

 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகளைத் தாண்டுமா 2.0?  #2Point0Teaser #Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பட டீசர் வந்துவிட்டது. ஷங்கரின் பிரமாண்ட கற்பனையின் ஒரு சின்ன துணுக்கை சாம்பிள் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

ஆன்லைனில் அனைத்து தளங்களிலும் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது 2.0 பட டீசர். தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே இந்த டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் வெளியாகி 10 மணி நேரம் ஆகியிருக்கிறது. அதற்குள் மூன்று மொழிகளிலும் சேர்த்து 20 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது இந்த டீசருக்கு.

இந்தியப் படங்களின் டீசர்கள் அல்லது ட்ரைலர்கள் அதிகம் பார்க்கப்பட்டவை ரஜினியின் படங்கள்தான். அவரது கபாலி டீசர், பாடல் வீடியோக்கள் அனைத்தும் சேர்த்தால் 100 மில்லியன் பார்வைகளைத் தாண்டும். அதேபோலத்தான் காலாவுக்கும்.

இப்போது 2.0 டீசர் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி 2 டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்ததே இதுவரை சாதனையாக உள்ளது. அந்த சாதனையை 2.0 நிச்சயம் முறியடிக்கும் என ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகினரும் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.

– வணக்கம் இந்தியா

From around the web