மோடியின் முன்னிலையில் ஆகஸ்ட் 16ம் தேதி கட்சி தொடங்குகிறாரா ரஜினிகாந்த்?

சென்னை: தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்தனும் என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்த 1996ம் ஆண்டு முதலாகவே, அவர் கட்சி தொடங்கப் போகிறார் என்று தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் செய்தியாக, கட்டுரையாக வெளியிட்டுள்ளன. ரஜினிகாந்த் அவருடைய வாயால் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னது ஒரே ஒரு தடவை தான். 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னார். அப்போது கூட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி
 

சென்னை:  தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்தனும் என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்த 1996ம் ஆண்டு முதலாகவே, அவர் கட்சி தொடங்கப் போகிறார் என்று தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் செய்தியாக, கட்டுரையாக வெளியிட்டுள்ளன.

ரஜினிகாந்த் அவருடைய வாயால் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னது ஒரே ஒரு தடவை தான். 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னார். அப்போது கூட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தான் கூறியிருந்தார். 

அதாவது சட்டமன்றத் தேர்தலை ஒட்டியே அவருடைய கட்சி அறிவிப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார். ஆனாலும், ரஜினிகாந்துக்காக ஊடகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் கட்சி அறிவிப்பு தேதியை நிர்ணயிப்பதும், அந்தப் பழியை ரஜினி மீதே சுமத்துவதுமாக இருக்கின்றன.

இதோ, இப்போது ஒரு பத்திரிக்கையில் ஆகஸ்டு 16ம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் அது பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை பிரதமர் முடித்து விட்டு வருவதற்காகவே, அடுத்த நாளான ஆகஸ்டு 16ஐ தேர்வு செய்ததாக வேறு காரணத்தையும் அடுக்கி உள்ளார்கள்.

எல்லாரையும் மனம் திறந்து பாராட்டும் ரஜினிகாந்த் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்ற மோடியையும் பாராட்டினார். அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொண்டார். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் நிலவரங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அப்படி இருக்கும் நேரத்தில்  பிரதமர் மோடியை அழைத்து தனிக் கட்சி தொடங்குவாரா என்ன? அதற்கு அவர் மோடியின் தலைமையிலான பாஜக விலேயே சேர்ந்து விடலாம் தானே? இதற்காகவா ரஜினி மக்கள் மன்றம் தொடங்கி பூத் கமிட்டி முதல் நிர்வாகிகள் நியமனம் செய்து கட்சியின் கட்டமைப்பு உருவாக்கி வைத்துள்ளார்?.

ரஜினி ரசிகர்கள் தான் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து தெளிவாக இருக்க வேண்டும்!

 

From around the web