2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா?

வரப்போகும் 2019 தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சி துவங்கி ரஜினிகாந்த் போட்டியிடுவாரா? இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல அரசியல் ஆர்வலர்களும் எதிர்நோக்கி இருக்கும் கேள்வி. முதலில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது ரஜினிகாந்துக்கு எளிதான ஒன்று. ஏனெனில் தனியாக நிற்க முடியும். ஜெயித்தால் ஆட்சி அமைக்கமுடியும். தன் செயல்பாடுகளை நிரூபிக்கமுடியும். தான் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்தாலும், ஆட்சியில் பங்குகொள்ளமுடியுமா என்பது முழுக்க முழுக்க சூழ்நிலை, சந்தர்ப்பத்தை பொறுத்தது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் என்பது
 

2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா?

ரப்போகும் 2019 தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சி துவங்கி ரஜினிகாந்த் போட்டியிடுவாரா? இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல அரசியல் ஆர்வலர்களும் எதிர்நோக்கி இருக்கும் கேள்வி.

முதலில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது ரஜினிகாந்துக்கு எளிதான ஒன்று. ஏனெனில் தனியாக நிற்க முடியும். ஜெயித்தால் ஆட்சி அமைக்கமுடியும். தன் செயல்பாடுகளை நிரூபிக்கமுடியும். தான் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் பாராளுமன்ற தேர்தலில்
ஜெயித்தாலும், ஆட்சியில் பங்குகொள்ளமுடியுமா என்பது முழுக்க முழுக்க சூழ்நிலை, சந்தர்ப்பத்தை பொறுத்தது.

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இரண்டுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கவும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தெரிகிறது. இங்குதான் ரஜினியின் நகர்வுகள் மிகவும்
முக்கியமானதாக இருக்கும். தவறினால் அது பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டிட நினைத்தால் கூட்டணி வைத்து சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்ற முதல் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும்

கூட்டணி வேண்டுமென்றால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியா, பிந்தைய கூட்டணியா? என்பது அடுத்த முடிவாகும். அப்படி கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்றாலும் மத்தியில் வேறொரு கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது ? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தேர்தலுக்கு பின் கூட்டணி என்று முடிவெடுத்து தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றும், மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி 272 இடங்களை பெற்றுவிட்டால் இங்கு தனித்து நின்று ஜெயித்து என்ன பயன். 37 எம்.பிக்களை
வைத்துக்கொண்டு ஜெயலலிதாவால் கூட ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தற்போதைய அதிமுக தலைமைக்கு 37 எம்பிகளின் பலம் கூட தெரியாது. ஆனால் ரஜினி கட்சி எம்.பி.க்கள் நியாயமாக செயல்படமுடியும், குரல் கொடுக்க முடியும்
.அவ்வளவுதான்.

அதே நேரத்தில் 10 இடங்களை பிடித்தால் கூட திமுக அதை வைத்துக்கொண்டு பல வேலைகளை செய்யும். தற்போதைய சூழலில் முடிவு எடுக்க முடியாத சிக்கலான சூழலில் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.

பாஜக தனித்து கூட ஆட்சியமைக்கலாம். மோடி, அமித்ஷா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறும் வித்தையை நன்றாக கற்று வைத்திருக்கின்றனர். காங்கிரஸ் பலமான கூட்டணி அமைக்கத் தவறி, மம்தா தலைமையில் மூன்றாம் அணி அமைந்துவிட்டால்
மோடியை தடுப்பது கடினம்.

சிவசேனா, தெலுங்கு தேசம், போன்றவை பாஜகவைவிட்டு விலகிப்போவது போல் தோன்றலாம், ஆனால் அது எல்லாமே தங்களின் பேரத்தை அதிகரிக்கச் செய்யப்படும் உத்தி. ஆந்திராவில் தெலுங்கு தேசம் இல்லை என்றால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை பாஜக
வளைத்து போட்டுவிடும். ஆக பாஜக தனி பெரும்பான்மை பெறாவிட்டலும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

காங்கிரஸ் பலமான மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், எற்கனவே ஜனதா தளம் (எஸ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுகஆகிய கூட்டணிக் கட்சிகள் இருக்கும் நிலையில், பிஎஸ்பி, எஸ்.பி, ஜேஎம்எம், என்சிபி போன்ற மாநிலக் கட்சிகள் 
இணைவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. பரூக் அப்துல்லாவையும், மம்தாவையும் சூழ்நிலையை பொறுத்து காங்கிரஸ் தன் இடங்களை விட்டுக் கொடுத்து கூட கூட்டணியில் வைத்துக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி பாஜகவுக்கு எதிரான
கட்சிகளை காங்கிரஸ் வெற்றிகரமாக ஒன்றிணைத்துவிட்டால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மேற்கண்ட மூன்று விஷயங்களில் எது நடந்தாலும், ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றி பெற்றும் பெரிதாக பலன் இருக்காது. அவருடைய கட்சி ஆதரவு இல்லாமலேயே மத்தியில் ஆட்சி நடக்கும். அப்படி நடந்தால் ரஜினிக்கு அடுத்து வரும் சட்டசபை தேர்தல்
கடினமாக இருக்கும்.

– மனோகரன்

 

From around the web