2019 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனியாக போட்டியிடுவாரா? அல்லது அவருக்கு ஏற்ற கூட்டணி எது?

பாராளுமன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைந்து விட்டால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிடும். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த ஒரு கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேசிய போது எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் பாஜக கூட்டணியை விட அதிகம் என்பதை அவர் சுட்டிகாட்டியுள்ளார். மூன்றாவது அணி உருவாகி விடக்கூடாது. எத்தகைய சமரசம் செய்தாவது இரு முனைப் போட்டி உருவாக்கி
 

பாராளுமன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைந்து விட்டால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிடும். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த ஒரு கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேசிய போது எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் பாஜக கூட்டணியை விட அதிகம் என்பதை அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மூன்றாவது அணி உருவாகி விடக்கூடாது. எத்தகைய சமரசம் செய்தாவது இரு முனைப் போட்டி உருவாக்கி பாஜகவையும் மோடியையும் வீழ்த்திவிட வேண்டும் என ராகுல் காந்தி உறுதியாக இருப்பது தெரிகிறது.

ராகுலைப் பொறுத்தவரை மம்தாவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மட்டுமே அவருடைய அணியில் கூடுதலாக சேர வாய்ப்பு உள்ளது. சிவசேனாவும், தெலுங்குதேசமும் பாஜக பக்கம் சாயலாம் அல்லது தனியாக போட்டியிடலாம். இந்த நால்வருமே தனியாக களம்
இறங்கும் முடிவும் எடுக்கலாம். இவர்களில் சிலர், கூட்டணியில் சேராமல், தனியாகப் போட்டியிட முடிவெடுத்தால் கூட 2019 தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிலாமல் போகலாம்.

ஆக ரஜினிகாந்த் எடுக்கப் போகும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகள், அடுத்து வரும் அரசியல் சூழ்நிலைகளை பொறுத்தே அமையும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகின்றனர் என்பதை பொறுத்து எந்த கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு என்று அவரால் ஓரளவுக்கு யூகிக்கமுடியும். ரஜினிகாந்த் தனியாக போட்டியிட்டு 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு சாதகமான சூழல்கள் எவை?

மும்முனைப் போட்டியில் மூன்றாவது அணி, பாஜக, காங்கிரஸ் என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ரஜினிகாந்துக்கு 25 எம்.பிக்கள் கிடைத்துவிட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு உண்டு. தன் கொள்கை சார்ந்த நிபந்தனைகளுக்கு யார் ஒத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு ரஜினி தன் ஆதரவைத் தரலாம். அந்த நிபந்தனைகள் நிச்சயம் பொது வெளியில் சொல்லப்படும்.

ஒரு வேளை மம்தாவையும் பரூக்கையும் காங்கிரஸ் இழுத்து, சிவசேனாவையும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை, பாஜக தனது கூட்டணிக்கு இழுக்க முடியாமல் போனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புகள் குறைவு . காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் தேர்தலுக்கு பின் அவர்கள் 272 இடங்களுக்கும் குறைவாகப் பெற்றால் ரஜினியின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும்.

ஆனால் திமுக இருக்கும் கூட்டணிக்கு ரஜினி போவது கடினம். திமுகவும் அதை விரும்பாது. ஆனால் திமுக சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றால் ரஜினிகாந்துக்காக திமுகவை கழட்டிவிட காங்கிரஸ் தயங்காது. இன்னொரு பக்கம் இதே நிலை பாஜகவுக்கும் நேர்ந்தால் அவர்களுக்கும் ரஜினி தேவைப்படுவார். அப்போது அதிமுகவை கழட்டிவிட பாஜகவும் தயங்காது.

– மனோகரன்

 

From around the web