2019 பாராளுமன்ற தேர்தல்: ரஜினிகாந்த் பாஜகவுடன் கை கோர்ப்பாரா?

காங்கிரஸ், பாஜக என இரண்டு கூட்டணிக்கும் ரஜினிகாந்தின் எம்.பி.க்கள் தேவைப்படும் என்ற நிலை என்றால், அது நாட்டுக்கே நல்லதாக அமையும். நதி நீர் இணைப்பு உள்ளிட்ட தேசிய நலன் சார்ந்த திட்டங்களை அமல் படுத்த ஆதரவு தருபவர்களுக்கு, கண்டிஷன்களுடன் ஆட்சியமைக்க ஆதரவு தரலாம். ஆட்சியின் நிலைத்தன்மைக்காக, அரசிலும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பலமான கூட்டணி அமைத்து, இரண்டுக்குமே வெற்றி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், இரண்டு கூட்டணிகளில் எது வேண்டுமானாலும் ஆட்சியமைக்கலாம்
 

2019 பாராளுமன்ற தேர்தல்: ரஜினிகாந்த் பாஜகவுடன் கை கோர்ப்பாரா?

காங்கிரஸ், பாஜக என இரண்டு கூட்டணிக்கும் ரஜினிகாந்தின் எம்.பி.க்கள் தேவைப்படும் என்ற நிலை என்றால், அது நாட்டுக்கே நல்லதாக அமையும். நதி நீர் இணைப்பு உள்ளிட்ட தேசிய நலன் சார்ந்த திட்டங்களை அமல் படுத்த ஆதரவு தருபவர்களுக்கு, கண்டிஷன்களுடன் ஆட்சியமைக்க ஆதரவு தரலாம். ஆட்சியின் நிலைத்தன்மைக்காக, அரசிலும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

ஆனால் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பலமான கூட்டணி அமைத்து, இரண்டுக்குமே வெற்றி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், இரண்டு கூட்டணிகளில் எது வேண்டுமானாலும் ஆட்சியமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால், ரஜினிகாந்த்க்கு முடிவு எடுப்பது சிரமம் தான். இவருடைய கண்டிஷன்களுக்கு அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

அப்படிப் பட்ட சூழலில், ரஜினிக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணிதான் நல்லது. குறைந்த பட்ச கொள்கைகள் என்ற அளவில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை, முன்னதாகவே சேர்த்துக் கொள்ளவும் முடியும். அதில் ரஜினிக்கு இரண்டே சாய்ஸ் தான் . ஒன்று பாஜக கூட்டணி அல்லது காங்கிரஸ் கூட்டணி. ஆனால் இரண்டிலும் ரிஸ்க் இருக்கிறது.

இதில் பாஜக கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரிஸ்க். ஒன்று பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நல்ல பெயர் இல்லை. ஹெச்.ராஜா வின் தேவையற்ற அடாவடியும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படுத்துகிறது. இருந்தாலும், தமிழகத்தின் மற்ற எல்லா கட்சிகளையும் திமுக இழுக்கும் போது, பாஜகவை நிராகரிப்பது பற்றி யோசிக்க வேண்டும். தேசிய அளவில் பாஜக கூட்டணி வலுவாக அமைந்து வெற்றி வாய்ப்பு இருந்தால், பாஜக கூட்டணிதான் ரஜினிக்கு நல்லது.

தேர்தல் வியூகத்தில் ராகுலை விட மோடியும் அமித்ஷாவும் கை தேர்ந்தவர்கள். ரஜினிகாந்துடன் பாஜக சேர்ந்து விட்டால், தமிழகத்தில் அதிமுக தனித்து விடப்படும். அதிமுக ஜெயிக்காது என்று உறுதியாக தெரியும் போது, எம்.ஜி.ஆர். அனுதாபிகள் வாக்குகள் ரஜினிக்கு வரும், ஏனெனில் அவர்கள் எப்பாடு பட்டாவது திமுக வருவதை தடுப்பார்கள். திமுக எதிர்ப்பில் ஊறி வந்தவர்கள் அதிமுக தொண்டர்கள்.

அதேபோல் பெரும்பான்மை மக்களின் வாக்குகளும் ரஜினிக்கு வரும். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதற்கு காரணம் அவர்களின் இந்துத்துவா என்பதைவிட தமிழ்நாட்டுக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் முதல் காரணம். இல்லை என்றால் 2014 தேர்தலில் எப்படி பாஜக கூட்டணியால் 19% வாக்குகளை தமிழ்நாட்டில் பெற்றிருக்கமுடியும் ? அதுவும் மெஜாரிட்டி வாக்குகளை பிரிக்க ஜெயலலிதா இருக்கும்போது ?

ஆனால் மைனாரிட்டியினரின் நம்பிக்கையை பெறவும், பாஜக கூட்டணியில் இருந்தாலும் தன்னுடைய அடையாளம் இந்துத்துவா அல்ல, ஆன்மிகம் என்பதையும், மக்களுக்கு ரஜினி எவ்வளவு தூரம் புரிய வைக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அட, பாஜக கூட்டணி தானா, ஊடகங்கள் சொல்வது சரிதானா ? என்று கேட்கத் தோணுகிறதா? நடுநிலையாக இருந்து ரஜினிகாந்த் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பதைத் தான் நாம் பார்க்கிறோம். காங்கிரஸுடன் கூட்டணி வாய்ப்பு இருக்கிறதா என்பதை அடுத்து பார்க்கலாம்!

தொடரும்..

– மனோகரன்

முந்தைய பாகத்தைப் படிக்க…

From around the web