தூத்துக்குடியில் நாளை ஆஜராவாரா ரஜினிகாந்த்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் விசாரணை ஆணையத்தில் ரஜினிகாந்த் ஆஜராக விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று 100 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 100வது நாள், தடையை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக மனு வழங்குவதற்காக ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது நடந்த கலவரத்தில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம்
 

தூத்துக்குடியில் நாளை ஆஜராவாரா ரஜினிகாந்த்?தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் விசாரணை ஆணையத்தில் ரஜினிகாந்த் ஆஜராக விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று 100 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 100வது நாள், தடையை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக மனு வழங்குவதற்காக ஊர்வலம் செல்ல முயன்றனர். 

அப்போது நடந்த கலவரத்தில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். திப்படைந்தவர்களுக்கு ஆறுதல் செல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து தூத்துக்குடி சென்றார்.

திரும்பி வரும் போது விமானநிலையத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், போராளிகளுடன் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டார்கள். சமுக விரோதிகளே கலவரத்திற்கு காரணம் என்று கூறினார்.

தற்போது ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசனின் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கானோரிடம் விசாரித்து வருகிறார்கள். விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் படி நாளை செவ்வாய்கிழமை, பிப்ரவரி 25ம் தேதி ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தான் நேரடியாக வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியின் மனுவின் அடிப்படையில் அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலைக்குள் இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.A1TamiNews.com

From around the web