போலிசாரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி! இப்ப என்ன செய்வீங்க ரஜினி சார்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் என ஒரு பக்கம் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக பிரமுகருமான கே.அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டியின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியை அடித்த போது, சீருடையில் இருப்பவர்களை தாக்குவது பெரும் குற்றம் என்று கண்டனம் தெரிவித்தார் ரஜினிகாந்த். சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளார்கள். மதுரை
 

போலிசாரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி! இப்ப என்ன செய்வீங்க ரஜினி சார்!தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் என ஒரு பக்கம் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக பிரமுகருமான கே.அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியை அடித்த போது, சீருடையில் இருப்பவர்களை தாக்குவது பெரும் குற்றம் என்று கண்டனம் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளார்கள். மதுரை உயர்நீதிமன்றம் கிளை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார் என்று கராத்தே தியாகராஜனும், ரஜினியின் மக்கள் தொடர்பாளரும் ட்விட்டர் மூலம் தெரிவிக்கிறார்கள். ஆனால் ரஜினி இது வரையிலும் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க வில்லை.

இப்போது ரஜினிக்கு இடியாப்ப சிக்கலாகி உள்ளது இந்த போலீஸ் விவகாரம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், காவல்துறை அதிகாரியை அவதூறாக கெட்ட வார்த்தைகளால் பேசியும், காலால் எட்டியும் உதைத்துள்ளார். காவல்துறை அதிகாரி செய்தது சுங்கச் சாவடியில் இ-பாஸ் கேட்டது தான் பிரச்சனைக்கு காரணமாகி உள்ளது.

சீருடையில் இருந்த போலீசாரை எட்டி உதைத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். அந்த வீடியோ சமூகத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு என்ன சொல்லப் போகிறார் ரஜினிகாந்த்! பாவம், அவருக்காகவே தமிழ்நாட்டில் புதுசு புதுசா பிரச்சனைகள் வருகிறது போலிருக்கு!

A1TamilNews.com

From around the web