விரைவில் தொடங்கப்போகும் குளுகுளு குற்றால சீசன்! அருவியில் குளிக்க அனுமதி உண்டா?

தென் மாவட்டங்களின் ஊட்டியாக விளங்கும் குற்றாலத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரையிலும் சீசன் களைகட்டும். தென் மேற்குப் பருவக்காற்று தொடங்கி கேரளாவில் மழை பெய்யத் தொடங்கும் போது குற்றால அருவிகளில் நீர்வரத்து ஏற்படும். மேலும் மேற்குமலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் சாரல் பெய்யத் தொடங்கும். சாரல் மழையும், குற்றால அருவியின் குளியலும் நோய் தீர்க்கும் மருந்து என்றே சொல்வார்கள். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதும். தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல்
 

விரைவில் தொடங்கப்போகும் குளுகுளு குற்றால சீசன்! அருவியில் குளிக்க அனுமதி உண்டா?தென் மாவட்டங்களின் ஊட்டியாக விளங்கும் குற்றாலத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரையிலும் சீசன் களைகட்டும். தென் மேற்குப் பருவக்காற்று தொடங்கி கேரளாவில் மழை பெய்யத் தொடங்கும் போது குற்றால அருவிகளில் நீர்வரத்து ஏற்படும்.

மேலும் மேற்குமலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் சாரல் பெய்யத் தொடங்கும். சாரல் மழையும், குற்றால அருவியின் குளியலும் நோய் தீர்க்கும் மருந்து என்றே சொல்வார்கள். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதும். 

தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். அருவியில் குளித்து விட்டு வெளியே வந்து, சாரலில் நனைந்து கொண்டே சூடான பஜ்ஜி சாப்பிடுவது சொர்க்கமாகத் தெரியும்.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குற்றாலத்தில் சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் குற்றாலத்திற்கு வெளிமாவட்டத்தினர் அனுமதிக்கப் படுவார்களா? தென்காசி மாவட்டத்தினருக்கு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசு கட்டுப்பாடுகள் ஒரு பக்கம் இருக்கும் வேளையில், குற்றால சீசனை நம்பியுள்ள வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு சீசனில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எப்படி இருக்கப் போகிறது என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 

A1TamilNews.com

From around the web