ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்கள் குழு சொல்வதென்ன?

நாளை 5ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், பிரதீப் கவுர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்துள்ளார்கள். முதலமைச்சரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் மருத்துவக் குழுவினர் பேசினார்கள். அப்போது, ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம். பாதிப்பு அதிகம்
 
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்கள் குழு சொல்வதென்ன?நாளை 5ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், பிரதீப் கவுர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்துள்ளார்கள்.
 
முதலமைச்சரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் மருத்துவக் குழுவினர் பேசினார்கள். அப்போது,
ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம்  பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்து உள்ளோம். 
 
சென்னையில் ஊரடங்கு காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ முறைகளை கையாள திட்டமிட்டு உள்ளோம்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது,  நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே இதற்கு காரணம் என கூறி உள்ளனர்.
 
ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என்றாலும், பொது போக்குவரத்தால் நோய்பரவல் ஏற்படுவதாக மருத்துவக் குழுவினர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஊரடங்கு உத்தரவு இல்லாமல் போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றே தெரிகிறது.
 
சென்னை மற்றும் ஐந்து மாவட்டங்களில் அமலில் உள்ள முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாநிலம் முழுவதும் தளர்த்தப்பட்ட விதிகளுடன் 6ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.
 

From around the web