மளிகை, காய்கறி மூலம் கொரோனா பரவுமா?

கொரோனா வைரஸ் காற்றில் 3 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்கள் மீது 72 மணி நேரம் வரையும் உயிருடன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டவர் இருமும் போதும், தும்மும் போது அவரிடமிருந்து வெளிப்படும் மூக்குத் துளிகள், எச்சில்களிலிருந்து தான் கொரோனோ வெளியே வருகிறது. அது ஏதாவது ஒரு பொருளில் படும் போது, அதைத் தொடுபவர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது. அவரை அறியாமல் முகத்தைத் தொடும் போது, வாய், மூக்கு, கண் வழியாக உடம்பிற்குள்
 

மளிகை, காய்கறி மூலம் கொரோனா பரவுமா?கொரோனா வைரஸ் காற்றில் 3 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்கள் மீது 72 மணி நேரம் வரையும் உயிருடன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர் இருமும் போதும், தும்மும் போது அவரிடமிருந்து வெளிப்படும் மூக்குத் துளிகள், எச்சில்களிலிருந்து தான் கொரோனோ வெளியே வருகிறது. அது ஏதாவது ஒரு பொருளில் படும் போது, அதைத் தொடுபவர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது. அவரை அறியாமல் முகத்தைத் தொடும் போது, வாய், மூக்கு, கண் வழியாக உடம்பிற்குள் நுழைந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.

ஒரு வேளை கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருந்து, அது மளிகை பாக்கெட், காய்கறிகள் மீது ஒட்டியிருந்தால் அதை எப்படி பக்குவமாக நீக்குவது என்று டாக்டர். மது புருஷோத்தமன், தொலைக்காட்சி மூலம் விளக்கியுள்ளார்.

மளிகைப் பொருட்கள் பாக்கெட்டுகளில் இருப்பதால், உள்ளே கொரோனா தொற்று இருக்காது. பாக்கெட் ஓரத்தில் கத்திரிக்கோலால் வெட்டி தனியாக ஒரு டப்பாவில் கொட்டி விட்டு, பாக்கெட் கவரை குப்பையில் போட்டு விட வேண்டும். காய்கறி வாங்கி வரும் பையிலிருந்து ஒரு பாத்திரத்தில் கொட்டி விட்டு, பையை வெளியே வைத்து விட வேண்டும்.

காய்கறிகளை உப்பு, மஞ்சள் போட்டு தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம். தோல் நீக்கக்கூடிய காய்கறிகளை தோல் நீக்கி விட்டு பயன்படுத்தவும் என்று அவர் கூறியுள்ளார். காய்கறி வாங்கும் பையை சோப்பு போட்டு கழுவி வெயிலில் காய வைக்கலாம். பால் பாக்கெட் வாங்கும் போதும் இதே அணுகுமுறையை பயன்படுத்தலாம். உடனடியாக கையை சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.

மொத்தத்தில் நாம் வாங்கி வரும் பொருட்கள் மீது கொரோனா தொற்று இருக்கலாம் என்பதாக நினைத்து கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

A1TamilNews.com

From around the web