2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் ? – பகுதி 14

நாம் ஏற்கனவே பார்த்தது போல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவின் இமேஜ் தற்போது படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா ரஜினிகாந்த் என்பது சாமானியனுக்கும் எழும் கேள்வியாகும். இந்துத்துவா சக்திகள் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுத்து விட இன்று நேற்றல்ல, அவர் அரசியல் கருத்து சொல்ல ஆரம்பித்த 96 முதலாகவே முயன்று வருகிறார்கள். இது வரையிலும் வலையில் சிக்காத ரஜினி, இனியும் பாஜகவை தள்ளி வைக்கப் பார்த்தால், அவருடைய
 
நாம் ஏற்கனவே பார்த்தது போல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவின் இமேஜ் தற்போது படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா ரஜினிகாந்த் என்பது சாமானியனுக்கும் எழும் கேள்வியாகும். இந்துத்துவா சக்திகள் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுத்து விட இன்று நேற்றல்ல, அவர் அரசியல் கருத்து சொல்ல ஆரம்பித்த 96 முதலாகவே முயன்று வருகிறார்கள்.
 
இது வரையிலும் வலையில் சிக்காத ரஜினி, இனியும் பாஜகவை தள்ளி வைக்கப் பார்த்தால், அவருடைய அடுத்த சாய்ஸ் காங்கிரஸ் தான்.  சிஸ்டம் சரியில்லை அதை மாற்றவேண்டும் எனச் சொல்லி வரும் ரஜினி ஊழல் கறையுள்ள காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும் கேள்வி ஆகுமே? அதை மக்கள் ஏற்பார்களா என்பதும் பலத்த சந்தேகத்துக்குறியது. மேலும், ஈழப்படுகொலையின் சுவடு இன்னும் மறையவில்லை. ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூட இந்த வெறுப்பு இருக்கிறது.
 
ரஜினி ஈழ ஆதரவு நிலைப்பாடு உடையவர். ஆனால் காங்கிரஸின் இமேஜ் அதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. பாஜக கூட்டணியில் இந்துத்துவா ரிஸ்க் என்றால், காங்கிரஸ் கூட்டணியில் ஈழப்படுகொலை விஷயம் தமிழர் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதற்காக காங்கிரஸை தமிழக மக்கள் முழுவதும் புறக்கணித்துவிடவில்லை என்பதை 2016 சட்டமன்ற தேர்தல் உணர்த்தியது.  பாஜகவின் கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியிலும் ஈழப்பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் காண முயற்சிக்கவில்லை. சிங்களவர்கள் ஒடிசாவிலிருந்து சென்றவர்கள் என்று, அவர்களுக்கு சாதகமான நிலையையே பாஜகவும் எடுத்து வருகிறது.
 
ஒன்று படுகொலையில் சம்மந்தப்பட்டது என்றால் இன்னொன்று படுகொலை செய்த பேரினவாதத்திற்கு சாமரம் வீசும் கட்சி. இன அழிப்பு என்பதினால் காங்கிரஸ் மீது தமிழ் உணர்வாளர்களின் கோபம் இன்னும் நீடிக்கிறது. இதற்கு பரிகாரம் தேட காங்கிரஸை ரஜினிகாந்த் நிர்பந்திக்கலாம். அவர் எப்போதுமே, இனி நடக்கப் போவதை எண்ணி செயல்பட வேண்டும் என நினைப்பவர். 
 
இழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் வேளையில், இருப்பவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் ரஜினிகாந்தின் நிலைப்பாடு.ஏற்கனவே ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி ரஜினி அக்கறையாக பேசியிருக்கிறார், பல உதவிகளை செய்திருக்கிறார். ஈழ அகதிகளூக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது ரஜினியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என அவரின் ஒரு மேடைப்பேச்சு உணர்த்தியது.
 
ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு காங்கிரஸின் ராகுல் காந்திக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தலாம் ரஜினிகாந்த். இது குறித்து தேர்தல் அறிக்கையிலேயே, வெளிப்படையான அறிவிப்பை கோருவார். இலங்கையில் தமிழர் மறுவாழ்வுக்கும் திட்டங்கள் தீட்டவும் கோரிக்கை முன் வைக்கலாம். ஏழு பேர் விடுதலையை தங்கள் குடும்பம் எதிர்க்காது என ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்துள்ளார். இயக்குனர் ரஞ்சித்திடமும் உறுதி அளித்துள்ளார். எனவே, ரஜினிகாந்தின் இந்த இரு கோரிக்கைகளையும் அவர் பரீசிலிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், காங்கிரஸுடன் கைகோர்க்க ரஜினிகாந்துக்கு தயக்கம் இருக்காது.
 
ரஜினிகாந்த் – காங்கிரஸ் கூட்டணி என்றால் வைத்தால் திமுக தனித்து விடப்படும் அல்லது பாஜக பக்கம் திமுக போகும் சூழலும் வரலாம். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் போன்ற திமுகவின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள்  ரஜினி- காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம். ரஜினி கட்சி ஆரம்பித்த உடனேயே தமாகா  உறுதியாக இணைந்து விடும். ஜி.கே. வாசனுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆனாலும், தன் தேர்தல் நிலைப்பாட்டை மக்களுக்கு ரஜினிகாந்த் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.
 
திமுகவை தனித்தோ, பாஜக பக்கமோ தள்ளி விட்டு விட்டாலே தமிழகத்தில் ரஜினிகாந்தின் அணி கூடுதல் பலம் அடைந்து விடும். மீண்டும் ஒரு 1996 தேர்தல் போல் மாற வாய்ப்புள்ளது. அப்போது போல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால், மத்திய ஆட்சியிலும் ரஜினிகாந்துக்கு தனி செல்வாக்கு கிடைக்கும். தமிழக நிலவரத்தை வைத்துப் பார்த்தால், பாஜகவை விட காங்கிரஸுடன் கைகோர்க்க ரஜினிகாந்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
 
2019 பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், பாஜக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டுமா?. தனித்து அல்லது மூன்றாவது அணி அமைத்துப்  போட்டியிட முடியாதா?.. அடுத்து பார்க்கலாம்!
 
தொடரும்..
 
– மனோகரன்
 
முந்தைய பாகத்தைப் படிக்க…  
 
 

From around the web