மனைவி நல வேட்பு நாள்

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தவர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி. உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், நண்பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம், என தனித்தனியே கொண்டாடி மகிழ்கின்றனர். சுமங்கலி பூஜையை கணவன் நலனுக்காக மனைவியரும் வேண்டுகிறார்கள். குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மனைவிக்கு
 

மனைவி நல வேட்பு நாள்

ல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை!

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.

உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.

ஜெயப்பிரகாஷ் சுப்ரமணியன்

From around the web