அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!

பெண்டன்வில்: மனைவி நலம் வேண்டி அர்கான்சா மாநிலத்தின் பெண்டன்வில் நகரில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது. வால்மார்ட் தலைமையிடம் இங்கு தான் அமைந்துள்ளது. வேதாத்ரி மகரிஷியின் வழிகாட்டுதலில் நடைபெற்று வரும் மனவளக்கலை மன்றங்கள் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகின்றன. பெண்டன்வில்லில் உள்ள மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டது. திருச்சியிலிருந்து வந்திருந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் மாலா தம்பதியினர் இந்த முகாமை நடத்தினார்கள். முதலில் தவப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, உரிய தவத்திற்கான ஆசி வழங்கப்பட்டது. தொடர்ந்து,
 

அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!

பெண்டன்வில்: மனைவி நலம் வேண்டி அர்கான்சா மாநிலத்தின் பெண்டன்வில் நகரில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது. வால்மார்ட் தலைமையிடம் இங்கு தான் அமைந்துள்ளது.

வேதாத்ரி மகரிஷியின் வழிகாட்டுதலில் நடைபெற்று வரும் மனவளக்கலை மன்றங்கள் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகின்றன. பெண்டன்வில்லில் உள்ள மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டது.

திருச்சியிலிருந்து வந்திருந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் மாலா தம்பதியினர் இந்த முகாமை நடத்தினார்கள். முதலில் தவப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, உரிய தவத்திற்கான ஆசி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தம்பதிகளாக வந்திருந்தவர்களுக்கான முகாம் தொடங்கியது. மனைவியைப் பற்றிய நல்ல குணாதிசயங்கள், நற்செயல்களை கணவன்மார்கள் நினைவு கூர்ந்து அவர்களிடம் நேரிடையாக சொன்னார்கள். தங்கள் வாழ்வில் மனைவியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் வகையில் கவிதை வடிவில் ஒரு பாடலைப் பாடினார்கள். மலர் கொடுத்து அன்பைக் காட்டினார்கள்.

பதிலுக்கு மனைவிமார்கள், தங்கள் கணவன்மார்களிடம் கண்ட நிறைவான குணங்களைச் சொல்லி மகிழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் மிக அருகாமையில் நேருக்கு நேராகப் பார்த்து கொண்டே இதைச் செய்யும் போது, பரஸ்பர அன்பும் காதலும் கலந்த உணர்ச்சிமயமான நிலையை காண முடிந்தது.

அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!தங்கள் வாழ்வில் மனைவி வந்த பிறகு, நடந்த நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும், அதற்கு மனைவியின் பங்களிப்பையும் சில கணவன்மார்கள் பகிர்ந்து கொண்டனர். அதே போல் மனைவிமார்கள் சிலரும், தங்கள் கணவன்மார்களின் பரஸ்பர புரிதல், இணைந்து கடந்து வந்த பாதைகள், வெற்றிகளை பகிர்ந்து கொண்டனர்.

இல்லற வாழ்வில் மனைவியின் பங்களிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், வேலையுண்டு வீடு உண்டு என்று இருந்து விட்டேன். இந்த முகாம் மூலம் என் மனைவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன் என்று சொன்ன கணவன்களும் உண்டு. 25 தம்பதியினர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கணவன், மனைவிகளுக்கிடையே, ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாகவும் இந்த முகாம் அமைந்தது.

அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!

இதே போல், வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் சிகாகோ மனவளக்கலை மன்றம் சார்பில் லெமாண்ட் கோவிலில் மனைவி நல வேட்பு நாள் முகாம் நடைபெற உள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web