மீடியாவை சந்திக்க மறுக்கும் தமிழருவி மணியன்… எதிரணியின் சதியை முறியடிக்கத் திட்டம்! Exclusive

நேற்று முழுவதும் தமிழ்நாட்டின் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடகங்களில், ஏப்ரல் 14ல் ரஜினி கட்சி தொடங்குவதாகவும், ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பரில் சுற்றுப்பயணம் என்று செய்திகளிலும், விவாதங்களிலும் நிரம்பி வழிந்தன. ஒரு சிலர் இதை எப்படி தமிழருவி மணியன் சொல்லலாம். அவருக்கு அந்த அதிகாரத்தை ரஜினி வழங்கியுள்ளாரா? என்று விதண்டா வாதம் செய்துள்ளார்கள். இதே விசயங்களை கராத்தே தியாகராஜனும், ரவீந்திரன் துரைசாமியும் சொன்ன போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. ஆனால் தமிழருவி மணியன் சொன்னார் என்றால் அது
 

மீடியாவை சந்திக்க மறுக்கும் தமிழருவி மணியன்… எதிரணியின் சதியை முறியடிக்கத் திட்டம்! Exclusive

நேற்று முழுவதும் தமிழ்நாட்டின் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடகங்களில், ஏப்ரல் 14ல் ரஜினி கட்சி தொடங்குவதாகவும், ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பரில் சுற்றுப்பயணம் என்று செய்திகளிலும், விவாதங்களிலும் நிரம்பி வழிந்தன.

ஒரு சிலர் இதை எப்படி தமிழருவி மணியன் சொல்லலாம். அவருக்கு அந்த அதிகாரத்தை ரஜினி வழங்கியுள்ளாரா? என்று விதண்டா வாதம் செய்துள்ளார்கள். இதே விசயங்களை கராத்தே தியாகராஜனும், ரவீந்திரன் துரைசாமியும் சொன்ன போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை.

ஆனால் தமிழருவி மணியன் சொன்னார் என்றால் அது பெரும் பரபரப்பாகி விடுகிறது. ஏனென்றால் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிக்கும் முன்பே அவர் ஆலோசனை செய்தது தமிழருவி மணியனிடம் தான். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்கள். ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று திருச்சியில் மிகப்பெரிய மாநாடும் நடத்தினார் தமிழருவி மணியன்.

அன்று முதல் ரஜினியின் வாய்ஸ் ஆக மீடியாவில் பதிலளித்து வருகிறார் தமிழருவி மணியன். இடையில் சொந்த காரணங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருந்ததால் மீடியாவை சந்திக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் பேட்டிகள் மூலம் பேசி வருகிறார். இஸ்லாமியர்களுக்காக ரஜினி குரல் கொடுப்பார் என்று முதலில் சொன்னவரும் அவர் தான்.

இந்நிலையில் நேற்றைய தமிழருவி மணியனின் பேட்டியை, அவருக்கும் ரஜினிக்கும் சிண்டு முடிவது போலச் சிலர் திரித்து வருவதாகத் தெரிகிறது. அவர் ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியை, முழுமையாகத் திரித்து மீடியாவில் பரப்பப்பட்டுள்ளதாக, முன்னணி தொலைக்காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள ரஜினிக்கும், தமிழருவி மணியனுக்கும் நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றோம்.

“வட இந்திய ஆங்கில நாளேடு ஒன்று தமிழருவி மணியனைத் தொடர்பு கொண்டு, ஆகஸ்டில் மாநாடு இருக்குமா, செப்டம்பரில் சுற்றுப்பயணம் உண்டா போன்ற கேள்விகளை எழுப்பியபோது, “இருக்கலாம்” என்று மட்டுமே பதிலளித்துள்ளார். அதை தமிழக ஊடகங்கள் மிகப்பெரிய செய்தியாகவும் விவாதமாகவும் ஆக்கிவிட்டனர்.

கூடுதலாக ஏப்ரல் 14ல் ரஜினி கட்சி நிச்சயம் என்ற பொய்யான தகவலையும் கட்டமைத்து விட்டனர். ரஜினிக்கு , தமிழருவி மணியன் சங்கடத்தை ஏற்படுத்துகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய கனவு ஒரு நாளும் பலிக்காது, ரஜினியுடன் இறுதி வரை வரும் கூட்டணி தமிழருவி மணியன் தான். காமராஜரும் கக்கனும் போல் இருவரும் செயல்படுவார்கள் ” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.

மேலும் கூறுகையில், ஏப்ரல் 14ல் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்ற செய்தியை பரப்பி, அன்று அவர் கட்சி அறிவிப்பை வெளியிடாத பட்சத்தில், “ரஜினி இப்படித்தான் சொல்வார் ஆனால் கட்சி ஆரம்பிக்க மாட்டார்,” என்று பிரச்சாரம் செய்வதற்கான முன்னோட்டம் தான் நேற்றைய செய்திகள். இவைகளை முறியடிக்கும் வகையில் ரஜினியின் திட்டம் இருக்கும் என்றார்கள்.

தகவல்களை திரித்து வெளியிடுவதால், ரஜினி கட்சி அறிவிப்பு வெளிவரும் வரையில் இனிமேல் மீடியாவுக்கு பேட்டி தரப்போவதில்லை என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். அதே வேளையில் பின்னணியில், ரஜினி கட்சிக்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகத் தெரிகிறது.

ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. ரஜினி கட்சி தொடங்குவதும் உறுதி. அவருடன் சில கட்சிகள் கூட்டணி சேரப்போவதும் உறுதி. ரஜினியும் தமிழருவி மணியனும் தமிழ்நாட்டுக்கான பல திட்டங்கள் தீட்டி வருவதும் உறுதியாகத் தெரிகிறது. அதை எப்போது எங்கே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்ற ரகசியம் இன்னும் காக்கப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ரஜினி கட்சியைப் பற்றிய விளம்பரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை எதிரணியினரே செய்யும் “அதிசயம்” தான் தமிழகத்தில் புதிதாகத் தெரிகிறது

https://www.A1TamilNews.com

From around the web