இதே கேள்வியை கர்நாடகத்திடமும் கேட்டிருக்கலாமே!

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ‘ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், ஜல்லிக்கட்டு குறித்துப் பேச தமிழக அரசு எப்படி அனுமதித்தது? ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஏன் தடை விதிக்கவில்லை…? இது சட்டத்துக்கு எதிரானதல்லவா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். ஆனால் இதே உச்ச நீதிமன்றம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவில்லை போலிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் கலவர
 

இதே கேள்வியை கர்நாடகத்திடமும் கேட்டிருக்கலாமே!
ல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

‘ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், ஜல்லிக்கட்டு குறித்துப் பேச தமிழக அரசு எப்படி அனுமதித்தது? ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஏன் தடை விதிக்கவில்லை…? இது சட்டத்துக்கு எதிரானதல்லவா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் இதே உச்ச நீதிமன்றம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவில்லை போலிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் கலவர பூமியானது. காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விடமாட்டோம் என கன்னட அமைப்பினர், அரசியல் கட்சிகள் அழிச்சாட்டியம் செய்தன.

தமிழகத்தில் இத்தனை கன அடி நீர் விட வேண்டும் என தினமும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் கர்நாடக அரசு நேரடியாகவே, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் தண்ணீர் விடமாட்டோம். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சட்டத்துக்கே சவால் விட்டது.

ஒரு கட்டத்தில் நீதிபதிகளைப் பார்த்து, ‘இங்க அமர்ந்து கொண்டு தண்ணீர் விடச் சொல்கிறீர்கள். உங்களுக்கு கள நிலைமை தெரியாது. பேசாமல் இருங்கள்’ என்றே கூறிவிட்டார் கர்நாடக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்.

காவிரிப் பிரச்சினை குறித்து ஒரு நூறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த சூழலில் கர்நாடகா காவிரிப் பிரச்சினை குறித்து ஓயாமல் பேசியது.. போராட்டம் நடத்தியதே… மாட்சிமை தாங்கிய நாட்டின் உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவே இல்லையே!

From around the web