ஏம்மா என்ன டாக்டருக்குப் படிக்கச் சொல்றே? – டாக்டர் அம்மாவும் மகளும்!

மகள் : ஏம்மா என்ன டாக்டருக்குப் படிக்கச் சொல்றே? டாக்டர் அம்மா: பெண்கள் நல்லா படிச்சு தன் காலிலேயே நிற்கனும் . மகள் : ரொம்பக் கஷ்டமான படிப்பு , அது வேணுமா? டாக்டர் அம்மா : கட்டாயம் வேணும் . ஒரு காலத்திலே நாங்கெல்லாம் கனவு தான் காணமுடியும் . படிக்க முடியாது. மகள் :ஏம்மா , காசில்லையா ? டாக்டர் அம்மா : அது மட்டுமல்ல . பெண்கள் படிக்கக் கூடாது . அடிமையா
 

ஏம்மா என்ன டாக்டருக்குப் படிக்கச் சொல்றே? – டாக்டர் அம்மாவும் மகளும்!

மகள் : ஏம்மா என்ன டாக்டருக்குப் படிக்கச் சொல்றே?

டாக்டர் அம்மா: பெண்கள் நல்லா படிச்சு தன் காலிலேயே நிற்கனும் .

மகள் : ரொம்பக் கஷ்டமான படிப்பு , அது வேணுமா?

டாக்டர் அம்மா : கட்டாயம் வேணும் . ஒரு காலத்திலே நாங்கெல்லாம் கனவு தான் காணமுடியும் . படிக்க முடியாது.

மகள் :ஏம்மா , காசில்லையா ?

டாக்டர் அம்மா : அது மட்டுமல்ல . பெண்கள் படிக்கக் கூடாது . அடிமையா வீட்டிலே இருக்கணும் . ஆண்கள் தான் படிக்கணும் . அதிலேயும் உயர்ந்த ஜாதிங்கற பார்ப்பனர்கள் தான் பெரும்பாலும் டாக்டர், வக்கீல் என்று படித்தார்கள் .

மகள் : அய்யய்யோ ! அப்ப மத்தவங்கெல்லாம் ?

டாக்டர் அம்மா : அவங்களுக்கு வேலை செய்யனும் .அவ்வளவு தான் .

மகள் : அப்புறம் எப்படி நீங்கல்லாம் படிச்சீங்க ?

டாக்டர் அம்மா : திராவிடர் இயக்கத் தலைவர்கள் தான் முதன் முதல்லே ரொம்ப போராடி படிக்க உரிமை பெற்றுத் தந்தார்கள் .

மகள் : அப்புறம் ஏன் அவர்களை அண்ணனெல்லாம் திட்டுறாங்க ?

டாக்டர் அம்மா : தமிழன்- திராவிடன்னு எவனோ குழப்பி விடுறான், அதான்.

– டாக்டர்.சோம இளங்கோவன், யு.எஸ்.ஏ.

A1TamilNews.com

From around the web