ஒரு சிலருக்காக ஒட்டு மொத்தமாக இந்தி படிக்க கட்டாயப்படுத்துவதா?

இந்தி படிக்காத நாடார்கள் மும்பை, டெல்லியில் அனைத்து வணிகங்களிலும் சிறப்பாக வளர்ந்து இருக்கிறார்கள். அங்கே சென்ற பின் தேவை உணர்ந்து இந்தி கற்றுக் கொண்டார்கள். தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலமே போதுமானதாக இருக்கிறது. ஒருவேளை அங்கேயே வணிகம் செய்ய நேரிட்டால், அந்த மக்களின் மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆந்திராவில், கர்நாடகாவில் வணிகம் செய்யும் தமிழர்கள் சரளமாக தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள். அங்கே சென்று கற்றுக் கொண்டதுதான். தமிழ் அறவே தெரியாத
 

ஒரு சிலருக்காக ஒட்டு மொத்தமாக இந்தி படிக்க கட்டாயப்படுத்துவதா?இந்தி படிக்காத நாடார்கள் மும்பை, டெல்லியில் அனைத்து வணிகங்களிலும் சிறப்பாக வளர்ந்து இருக்கிறார்கள். அங்கே சென்ற பின் தேவை உணர்ந்து இந்தி கற்றுக் கொண்டார்கள்.

தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலமே போதுமானதாக இருக்கிறது. ஒருவேளை அங்கேயே வணிகம் செய்ய நேரிட்டால், அந்த மக்களின் மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆந்திராவில், கர்நாடகாவில் வணிகம் செய்யும் தமிழர்கள் சரளமாக தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள். அங்கே சென்று கற்றுக் கொண்டதுதான்.

தமிழ் அறவே தெரியாத மார்வாடிகள், பஞ்சாப் சிங்குகள், மற்ற வடநாட்டுக்காரர்கள் இங்கே வந்த பின் தமிழைக் கற்றுக் கொள்கிறார்கள். சீனா சென்று சீன மொழியைக் கற்றுக் கொண்டு அங்கே டிராவல்ஸ் மற்றும் ஓட்டல் நடத்தும் ஒரு நண்பரை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். சென்னைக்கு வந்து இருந்தார்.

இப்படி சிலர் செல்கிறார்கள் என்பதற்காக தேவை இல்லாமல் அனைவரையும் ஒட்டு மொத்தமாக இந்தி படிக்க கட்டாயப்படுத்துவது பயனற்ற சுமையை சுமக்க வற்புறுத்துவதற்கு ஒப்பானது ஆகும். இந்தி திணிப்புக்குள் ஒரு அரசியலும் ஒளிந்து இருப்பதைப் புரிந்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு நிச்சயம் இதை ஏற்காது. விரட்டி அடிக்கும்.

– மூத்த பத்திரிக்கையாளர் க.ஜெயகிருஷ்ணன்

From around the web