இதுவும் கடந்து போகும்… கொரோனா அச்சம் தவிர்ப்போம்!

கொரோனோ கிருமிக்கு தயவு இல்லை கொன்றிடுமோ எனும்பயத்தால் மக்களுக்கு தூக்கம் தொல்லை கடைகளிலோ பொருட்கள் எதுவும் இல்லை ஆனாலும் வரிசைகள் எங்கும் குறையவில்லை மூக்கை மூடுங்கள் எனுமெங்கும் இரைச்சல் ஒலி முகத்தை தொடாதே என்றெங்கும் கூச்சல் ஒலி அண்டாதே கண்கள் என்னும் அறிவுரைப் பேச்சு கழுவுங்கள் கைகள் என்னும் அச்சுறுத்தல் கூற்று பள்ளிகள் கல்லூரிகள் மூடியாச்சு பயணங்கள் கூட்டங்கள் நிறுத்தியாச்சு சாலைகளில் வாகனங்கள் குறைந்துபோச்சு வீட்டிலிருந்து அலுவல் வேலை துவங்கியாச்சு ஊடகங்கள் எல்லாமும் கூப்பாடு போட்டு வலைதளங்கள்
 
இதுவும் கடந்து போகும்… கொரோனா அச்சம் தவிர்ப்போம்!
Corona World Map as of 12:00 p.m. ET March 14, 2020 – Source : CDC

கொரோனோ கிருமிக்கு தயவு இல்லை
கொன்றிடுமோ எனும்பயத்தால் மக்களுக்கு தூக்கம்
தொல்லை

கடைகளிலோ பொருட்கள் எதுவும் இல்லை
ஆனாலும் வரிசைகள் எங்கும் குறையவில்லை

மூக்கை மூடுங்கள் எனுமெங்கும் இரைச்சல் ஒலி
முகத்தை தொடாதே என்றெங்கும் கூச்சல் ஒலி

அண்டாதே கண்கள் என்னும் அறிவுரைப் பேச்சு
கழுவுங்கள் கைகள் என்னும் அச்சுறுத்தல் கூற்று

பள்ளிகள் கல்லூரிகள் மூடியாச்சு
பயணங்கள் கூட்டங்கள் நிறுத்தியாச்சு

சாலைகளில் வாகனங்கள் குறைந்துபோச்சு
வீட்டிலிருந்து அலுவல் வேலை துவங்கியாச்சு

ஊடகங்கள் எல்லாமும் கூப்பாடு போட்டு
வலைதளங்கள் எங்கெங்கும் கொரோனா பேச்சு

பெரியோர்கள் இறப்பாரென அச்சம் பெருக
பிள்ளைகள் காப்பதற்கு கேள்விகள் நிறைய

பொருளாதாரம் குறைந்ததெனும் கதறல் கேளு
போக்குவரத்து இல்லையெனும் கவலைப் பாரு

திரையரங்கங்கள், உணவகங்கள் காலி ஆச்சு
பூங்காக்கள் பொதுஇடங்கள் வெறுச்சோடிப் போச்சு
நூலகங்கள் ஏற்கெனவே நமக்கு மறந்தே போச்சு

கடல்கடந்து பயணம் செய்து இறங்கிவந்து
கோவிட்19 இப்போது உலக நாயகனாச்சு

அதிவேகத்துடன் உலகம் எங்கும் பரவலாச்சு
முகநூல் புலனம் எலாம் நெருக்கடி ஆச்சு

புகைப்படங்கள் காணொலிகள் நிறைந்துப் போக
நகைச்சுவையும் பொழுதுபோக்கும் நிரம்பி போச்சு

பயம் கொள்வதால் நோய் நம்மை தொற்றாமல்
போகுமா?
பயப்படாமல் இருப்பதால் நோய் நம்மை தேடி
வந்தும் தொற்றுமா?
என்றப் புரிதல் காணாமல் ஓடி,
அச்சம் எனும் நோய் வந்துலகை இன்று ஆளுது பாரு

இது போன்ற தருணங்களில், நம் ஆசான் வள்ளுவன் நமக்கு வாழ்க்கையின் நிலையாமை குறித்து கூறியதை நினைவு கொள்வோம். 

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”

இதன் (குறள் 336) சாரம் என்பதெனில் நேற்றிருப்பவர், இன்று இல்லாமல் போவதே இந்த நிலையற்ற வாழ்வு. ஆதலால் பயம் கொண்டு என்ன பலன்? யாது பயன்? நேரம் வந்தால் கூடு விட்டு உயிர் பிரிந்தாக வேண்டும் என்பதே இயற்கையின் நீதி.

எனவே அச்சம் தவிர்ப்போம்.
இதுவும் கடந்து போகும் என நம்புவோம்.

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

http://www.A1TamilNews.com

From around the web