பூசணிக்காயை ஏன் திருஷ்டிக்கு உடைக்கிறோம்?

அரக்கர் குலத்தில் தோன்றிய கூச்மாண்டன், தேவர்களை வம்புக்கு இழுத்து ,போரிட்டான். இவனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் விஷ்ணு பகவானைச் சரணடைந்தனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு அரக்கனுடன் போரிட்டார். தன் பலத்தை யாராலும் அசைத்து விட முடியாது என்ற இறுமாப்புடன் நாராயணனுடன் யுத்தம் செய்தான். யுத்தத்தில் விஷ்ணு பகவான் கூச்மாண்டனை வேரற்ற மரம் போல் சாய்த்தார். குற்றுயிரும் , குலையுருமாக இருந்த கூச்மாண்டன், மரணத் தறுவாயில் பகவானைச் சரணடைந்தான். அது சமயம்,தான் மறைந்தாலும் அழியாப் புகழ்
 

பூசணிக்காயை ஏன் திருஷ்டிக்கு  உடைக்கிறோம்?

ரக்கர் குலத்தில் தோன்றிய கூச்மாண்டன், தேவர்களை வம்புக்கு இழுத்து ,போரிட்டான். இவனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் விஷ்ணு பகவானைச் சரணடைந்தனர்.

தேவர்களின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு அரக்கனுடன் போரிட்டார். தன் பலத்தை யாராலும் அசைத்து விட முடியாது என்ற இறுமாப்புடன் நாராயணனுடன் யுத்தம் செய்தான்.

யுத்தத்தில் விஷ்ணு பகவான் கூச்மாண்டனை வேரற்ற மரம் போல் சாய்த்தார். குற்றுயிரும் , குலையுருமாக இருந்த கூச்மாண்டன், மரணத் தறுவாயில் பகவானைச் சரணடைந்தான்.

அது சமயம்,தான் மறைந்தாலும் அழியாப் புகழ் வேண்டி பகவானிடம் வரம் கேட்டான்.
வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாதவருக்கு எப்படி அழியாப் புகழைத் தரமுடியும் என்று கேட்ட பகவானிடம், இருந்த வரையில் யாருக்கும் பயன்பட வில்லை. இறந்த பிறகாவது பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று மன்றாடினான்.

வாசலில் வைத்தால் கண் திருஷ்டி , பில்லி சூன்யம், ஏவல் என சகல தோஷமும் மறையச் செய்து, தானம் தருபவருக்கும், பெறுபவருக்கும் கூட நன்மைகள் விளையும் பூசணிக்காய் பிறவியை எடுக்கக் கடவது என்று பகவான் அந்த கூச்மாண்டனுக்கு பூசணிக்காய் பிறவியை அளித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அதானாலேயே திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைக்கும் வழக்கம் நம்மிடையே வந்தது. அமாவாசை முந்தைய தினம் இரவு பூசனிக்காயில் ஓட்டைப்போட்டு நவதாணியங்களால் நிரப்பி வீடு , தொழில் செய்யும் இடங்கள் இவற்றில் ஒரு மூளையில் வைத்து விட்டு , அமாவாசை தின உச்சிப் பொழுதில் மதியம் 12மணிக்கு சுற்றி உடைத்து ஓடும் நீரில் வீச 1000 மடங்கு நன்மைகள் விளையும் .

எந்தத் திருஷ்டியையும் போக்கி வியாபாராம் செழிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

https://www.A1TamilNews.com

From around the web