கிருஷ்ண ஜெயந்திக்கு வீடுகளில் பாதம் வரைவது எதனால்?

ஆவணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். நம்மை கண்களை இமை காப்பது போல காப்பவர் கண்ணன். கிருஷ்ணரை நம்பி,வழிபட்டால் வெற்றி நிச்சயம். கண்ணனிடம் சரணாகதியாக நிம்மதியும், மகிழ்ச்சியும் நம் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது ஐதீகம். கிருஷ்ணன் பிறந்தது நள்ளிரவில் தான். இதனால் பொதுவாக மாலை நேரங்களில் தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அன்று மாலையில் வாசல் தெளித்து மாக்கோலமிட வேண்டும். வாசற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சுக்
 

கிருஷ்ண ஜெயந்திக்கு  வீடுகளில் பாதம் வரைவது எதனால்?வணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். நம்மை கண்களை இமை காப்பது போல காப்பவர் கண்ணன். கிருஷ்ணரை நம்பி,வழிபட்டால் வெற்றி நிச்சயம். கண்ணனிடம் சரணாகதியாக நிம்மதியும், மகிழ்ச்சியும் நம் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

கிருஷ்ணன் பிறந்தது நள்ளிரவில் தான். இதனால் பொதுவாக மாலை நேரங்களில் தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அன்று மாலையில் வாசல் தெளித்து மாக்கோலமிட வேண்டும்.

வாசற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களால் நம் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதை குறிக்கும் வகையில் இந்தக் கோலங்கள் இடப்பட வேண்டும்.

கிருஷ்ணர் வருகையால் ஆயர்பாடியில் செல்வவளம் பெருகியது போல்,ஆண்டுமுழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் காலம் ,காலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை.

கோகுலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.

ஆரம்பங்களில் மக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன் தொடர்ச்சியில் இந்நாளில் அரிசிமாவினால் பாதங்கள் வரைகிறோம்.

A1TamilNews.com

From around the web