திமுகவினருக்கு ரஜினி மேல் என்ன கோபம்… ஏன் இத்தனை விமர்சனங்கள்?

2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. முதல் தடவை நடந்த தவறுகள் பெருமளவற்றை களைந்தார். சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட சில நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை போன்ற சமூகநலத் திட்டங்களையும் அறிமுகப் படுத்தினார். பெரிய அதிருப்தி எழாமல் பார்த்துக் கொண்டார். ஆகவே 2006ல் மறுபடியும் அதிமுக ஆட்சிதான் என கருத்துக் கணிப்புகள் கூறின. குமுதம் இதழ் வாரவாரம் சில தொகுதிகளுக்கான கருத்து கணிப்பை வெளியிட்டு வந்தது. முதல் சில வாரங்களில் பெரும்பாலான தொகுதிகளில்
 

 திமுகவினருக்கு ரஜினி மேல் என்ன கோபம்… ஏன் இத்தனை விமர்சனங்கள்?2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. முதல் தடவை நடந்த தவறுகள் பெருமளவற்றை களைந்தார். சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட சில நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை போன்ற சமூகநலத் திட்டங்களையும் அறிமுகப் படுத்தினார். பெரிய அதிருப்தி எழாமல் பார்த்துக் கொண்டார். ஆகவே 2006ல் மறுபடியும் அதிமுக ஆட்சிதான் என கருத்துக் கணிப்புகள் கூறின.

குமுதம் இதழ் வாரவாரம் சில தொகுதிகளுக்கான கருத்து கணிப்பை வெளியிட்டு வந்தது. முதல் சில வாரங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவே முண்ணனியில் இருந்தது. அப்போதுதான் இலவச கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தார் கருணாநிதி. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி,கிரண்டர் என் சகட்டுமேணிக்கு இலவச அறிவிப்புகள். இதற்கு பின் குமுதம் வெளியிட்ட கருத்து கணிப்புகளில் திமுக முந்தியது.

இலவச அறிவிப்புகளால் திமுக முந்துகிறது என குமுதம் சொன்னது. ஆனால் அப்படி இருந்தும் திமுகவால் மெஜாரிட்டி இடங்களை ஜெயிக்க முடியவில்லை. 5 வருடம் திமுகவை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லி சொல்லியே ஒரு வழி ஆக்கிவிட்டார் ஜெயலலிதா. அதற்கு பின் வந்த 2011 தேர்தலிலிருந்து இன்று வரை திமுகவால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஜெயிக்கமுடியவில்லை.

2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் கூட செய்யத் துணியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அதிமுக தனியாக நின்று 37 பாராளுமன்ற இடங்களை வென்று திமுகவை பூஜ்யமாக்கியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருடைய தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையான தினகரனிடம் வெறும் 15% ஓட்டுவாங்கி ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்தது பரிதாபம். ஆனால் தங்களுக்கு 30% வாக்கு வந்தி இருப்பதாக மார் தட்டுகிறது திமுக.

1977 முதல் இன்றுவரை திமுகவை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த வெற்றிகளும், புள்ளி விவரங்களும் காண்பிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கு எதிரான அலையால், ராகுல் காந்தி பிரதமர் ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. கடந்த 41 வருடங்களில் ஒரே ஒரு முறையாவது திமுக தன் சொந்த பலத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவை வென்று ஆட்சியமைத்தது என்று யாராவது நிரூபிக்க தயாரா ?

இன்று ஜெயலலிதாவும், கருணாநிதியும் நம்மிடையே இல்லை. ஸ்டாலின் திமுகவை வழி நடத்துகிறார். ஆனால் அதிமுகவில் ஸ்டாலின் அளவுக்கு வலுவான தலைமை இல்லாத போதும்  அதிமுக அரசை ஸ்டாலினால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எப்போது தேர்தல் வைத்தாலும் உறுதியாக திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற நிலைமை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிலையற்ற ஆட்சி இருந்தது. ஆனால் வரும் தேர்தலில் இருக்கிறதா ?

பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான விஷயங்களை, எதிர்ப்புகளை திரட்டி Anti Incumbancy Factor ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுதான் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும். ஆனால் 2011 முதல் இன்றுவரை கடந்த 9 வருடத்தில் திமுகவால் அதை செய்யவே முடியவில்லை.

ஆனால் இன்று அதை செய்யவேண்டிய அவசியமுமில்லை. இந்த ஆட்சி வேண்டாம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. ஆனால் கடந்த மே மாதத்துக்கு முன் வரை இந்த ஆட்சி எப்போது கவிழ்ந்தாலும் தாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்கிற உறுதியான மனநிலையில் இருந்த திமுகவை ரஜினியின் அரசியல் குறித்த பேச்சுக்கள் கொஞ்சம் கலவரப்படுத்தியது.

2017ம் ஆண்டு டிசம்பரில்  உறுதியாக கட்சி தொடங்குவதாக  ரஜினி அறிவித்தவுடன் திமுக ஆடிப்போய்விட்டது என்பது 100 சதவீதம் உண்மை. ரஜினிகாந்தின் செல்வாக்கு என்னவென்று நம்மை எல்லோரையும் விட திமுகவுக்கு நன்றாக தெரியுமல்லவா!. அருகில் இருந்து பார்த்தவர்களாயிற்றே! அதே சமயத்தில் 96ல் எந்தக் கேள்வியும் கேட்காமல் ரஜினிக்கு ஓட்டுப்போட தயாராக இருந்த மக்கள் இன்றும் அப்படியே இருக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை.

சொல்லப்போனால் அவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்காததால் அவரை அரசியல்வாதியாகவோ, அவருடைய மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாகவோ நிறைய பேர் கருதுவதில்லை. ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பும், கொள்கைகளும், செயல்திட்டங்களும் அறிவிக்கப்படும்போது, மக்களின் நம்பிக்கை அவரை நோக்கி மீண்டும் திரும்பலாம்.

பின்னர், எதற்காக திமுக ரஜினிகாந்தை விமர்சிக்கவேண்டும் ? திமுக, அதிமுக இரண்டு கட்சி தலைவர்களும் தங்களின் ஆட்சிக் கனவுக்கு இடையூறாக ஆக இருப்பவர்களைத்தான் நேரடியாக விமர்சிப்பார்கள். ஆனால் தங்களின் வெற்றியை தட்டிப்பறித்து இன்னொரு கட்சிக்கு உதவும் Spoil sport ஆக இருப்பவர்களை, தங்களின் கூட்டணி கட்சி மூலமாகவோ அல்லது தங்கள் கட்சியின் மூன்றாம் மட்ட ஆட்கள் மூலமாகவோ அல்லது தங்கள் பேச்சாளர்கள் மூலமாகவோதான் விமர்சிப்பார்கள்.

தங்கள் கட்சிக்கு ஒரு கட்டத்தில் ஆபத்பாந்தவராக இருந்த ரஜினிகாந்தை திமுக ஏன் இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்? ரஜினியின் பலம் என்னவென்று அறிந்தவர்களாச்சே!

– மனோகரன்

A1TamilNews.com

From around the web