வேலூரில் அதிமுக தோல்விக்குக் காரணம் ‘பாஜக மேஜிக்’ தானா?

சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளது அதிமுக. 9 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும் முதல்வர் இபிஎஸ்-க்கு வேலூர் தொகுதி மக்கள் மக்களவையில் கூடுதலாக ஒரு இடத்தைத் தர விரும்பவில்லை என்பது தானே உண்மை. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் போது தள்ளி வைக்கப்பட்ட தொகுதி என்றாலும், நடந்தது ஒரு இடைத்தேர்தல் போலத்தான். முதல்வர், துணை முதல்வர் உட்பட ஒட்டு மொத்த அமைச்சரவையும் வேலூரில்
 

சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளது அதிமுக. 9 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும் முதல்வர் இபிஎஸ்-க்கு வேலூர் தொகுதி மக்கள் மக்களவையில் கூடுதலாக ஒரு இடத்தைத் தர விரும்பவில்லை என்பது தானே உண்மை.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் போது தள்ளி வைக்கப்பட்ட தொகுதி என்றாலும், நடந்தது ஒரு இடைத்தேர்தல் போலத்தான். முதல்வர், துணை முதல்வர் உட்பட ஒட்டு மொத்த அமைச்சரவையும் வேலூரில் முகாமிட்டு வேலை செய்தார்கள். வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புதிய நீதிக் கட்சியின் தலைவர் என்றாலும், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டதால், அதிமுக துண்டு போட்டுத் தான் ஓட்டு கேட்டார். அவரை அதிமுக வேட்பாளர் என்றே முதல்வர் உட்பட அனைவரும் ஒவ்வொரு மேடையிலும் அறிவித்தார்கள்.

தவிர, ஏ.சி.சண்முகத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கும் இந்தத் தொகுதியில் இருக்கிறது. அவருடைய முதலியார் சாதியினரும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். புதிய நீதிக் கட்சி என்பதே பாமக போல், முதலியார் சாதிக் கட்சியாகத் தானே பார்க்கப்படுகிறது.

பணம் பாதாளம் வரை பாய்கிறது என்ற காரணத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட தேர்தலில் பணப்பட்டுவாடா எப்படி இருந்தது என்பதைச் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?. இதை எல்லாத்த்தையும் மீறி திமுக 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றால் சுலபமாக புறந்தள்ளி விடமுடியவில்லை.

வேலூர் தொகுதியில் அதிக அளவில் உள்ள இஸ்லாமிய சமுதாய மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் இஸ்லாமிய வாக்குகள் நிச்சயம் அதிமுகவுக்கே கிடைத்திருக்குமே!

திமுக வெற்றிபெற்றாலும் நாடாளுமன்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் வரப்போவதில்லை என்று தெரிந்தே அந்தக் கட்சி கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதை ஜஸ்ட் லைக் தட் ஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை. திமுக வேட்பாளர் முற்றிலும் புதுமுகம். அதுவும் வாரிசு அடிப்படையில் திடீரென்று போட்டியில் குதித்தவர். மாறாக ஏ.சி சண்முகம் ஏற்கனவே இதே வேலூர் தொகுதியிலிருந்து 1984ம் ஆண்டே அதிமுக சார்பில் எம்.பி.ஆக வெற்றி பெற்றவர். தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்.

9 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற முடிந்த முதல்வரால் ஒரு பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை என்றால், அது பாஜக மேஜிக்காகத் தானே இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் அசுரபலத்துடன் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள பாஜக மீது தமிழக மக்களுக்கு பயம் அதிகரித்துள்ளது என்பதைத் தான் வேலூர் முடிவு தெரிவிக்கிறது. பாஜகவுடன் இருக்கும் அதிமுகவை வாக்காளர்கள் நிராகரித்துள்ளார்கள் என்பது தான் உண்மை.

ஒரு இடைத்தேர்தல் போல் நடந்த இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை, வாக்கு வித்தியாசத்தைக் காரணம் சொல்லி குறைத்து மதிப்பிட முடியாது. திமுகவுக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, அதிமுக-பாஜக அணிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பது தான் நிதர்சனம். இந்தக் கூட்டணி தொடரும் வரையிலும் அதுவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பலமாக மாறிவிடுகிறது.

அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இந்த ‘பாஜக மேஜிக்’ தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.

-ஆர்டிஎக்ஸ்

From around the web