சீனாவின் பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆப்கள் ஏன் தடை செய்யப்படவில்லை!பதில் அளிக்குமா மத்திய அரசு?

இந்தியா,சீனா எல்லைப் பிரச்சனைக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் கிளம்பின. இதைத் தொடர்ந்து சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ, யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கும் சீன ஆப்கள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ
 

சீனாவின்  பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆப்கள் ஏன்  தடை செய்யப்படவில்லை!பதில் அளிக்குமா மத்திய அரசு?ந்தியா,சீனா எல்லைப் பிரச்சனைக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் கிளம்பின. இதைத் தொடர்ந்து சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ, யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கும் சீன ஆப்கள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது.

ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆகிய மொபைல் ஆப்கள் மட்டும் ஏன் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை கேள்விகள் எழுந்து வருகின்றன. அதில் பப்ஜி ஆப் தென்கொரியாவில் உள்ள ப்ளுஹோல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் மூலமாக சீனாவில் பப்ஜி விளையாட்டு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகே, பப்ஜி விளையாட்டு சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

அதேபோல டென்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிமி ஸ்டூடியோஸ் உடன் கூட்டு சேர்ந்து கால் ஆஃப் டியூட்டி மொபைல் ஆப் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமான கலிபோர்னியாவை சேர்ந்தது ஆகும். பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி ஆகிய ஆப்களும் இந்தியாவில் ஏன் தடை செய்யப்படவில்லை என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்விகள் வைரலாகி வருகின்றன. பதில் அளிக்குமா மத்திய அரசு?

A1TamilNews.com

From around the web