அமெரிக்காவுக்கு போனாலும் திருந்தாத தமிழர்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

ஆரம்பக் காலங்களில் வேலை, படிப்பு ஆகியவற்றுக்காக அமெரிக்காவிற்கு வந்தவர்கள் பெரும்பாலும் நிலவுடைமை சமூகத்தைச் சார்ந்தவர்கள். சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், அதிகார போதையில் திளைத்தவர்கள். அமெரிக்கா வந்தபின் வேலை,வீடு,பிள்ளைகளின் படிப்பு என்று எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றவுடன், அதுவரை உள்ளே பூட்டி வைத்திருந்த அதிகார போதை தலைக்கு ஏறுகிறது. இங்குச் சிறுபான்மை சமூகமாக இருப்பதால் அமெரிக்க அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இவர்களுக்கு வாய்ப்பில்லை. இங்கிருக்கும் சட்டங்களால் சாதிய ரீதியான ஆதிக்கத்தை நேரடியாகச் செலுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்பதால், இவர்களின் அதிகார
 

அமெரிக்காவுக்கு போனாலும் திருந்தாத தமிழர்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!ஆரம்பக் காலங்களில் வேலை, படிப்பு ஆகியவற்றுக்காக அமெரிக்காவிற்கு வந்தவர்கள் பெரும்பாலும் நிலவுடைமை சமூகத்தைச் சார்ந்தவர்கள். சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், அதிகார போதையில் திளைத்தவர்கள்.

அமெரிக்கா வந்தபின் வேலை,வீடு,பிள்ளைகளின் படிப்பு என்று எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றவுடன், அதுவரை உள்ளே பூட்டி வைத்திருந்த அதிகார போதை தலைக்கு ஏறுகிறது.

இங்குச் சிறுபான்மை சமூகமாக இருப்பதால் அமெரிக்க அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இவர்களுக்கு வாய்ப்பில்லை. இங்கிருக்கும் சட்டங்களால் சாதிய ரீதியான ஆதிக்கத்தை நேரடியாகச் செலுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்பதால், இவர்களின் அதிகார போதைக்குத் தீனிபோடுவதற்கு இவர்களே தொடங்கியது தான் இங்கிருக்கும் சாதிச் சங்கங்கள்.

தமிழர்களை பொறுத்தவரைச் சாதி ரீதியாக மக்களை அணி திரட்டுவது மிகவும் சுலபம். மேலும் அமெரிக்காவிற்குப் புதிதாக வரும் தங்கள் சாதி ஆட்களுக்குச் சிறு சிறு உதவிகள் செய்தும் தங்கள் சாதி ஆட்களை அணி திரட்டுகின்றனர். இதுபோன்ற மக்களைத் திரட்டி சாதி சங்கங்களை உருவாக்கிப் பலப்படுத்திக் கொள்கின்றனர்.

இதுபோன்று சங்கங்களின் பொறுப்புகளில் அமர்ந்து தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டு, தங்கள் போதையை தனித்து கொள்கின்றனர். சிலர் தங்கள் சாதி பலத்திற்கு ஏற்ப அங்கங்கே இருக்கும் சில தமிழ்ச் சங்கங்களிலும் பொறுப்புகளில் அமர்ந்துகொண்டு தனது அதிகார எல்லையை பெரிதாக்கவும் செய்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இவர்களைப் பார்த்தவுடன் அய்யா வணக்கம் என்று சிலர் சொல்ல வேண்டும், மேடையில் கூப்பிட்டுச் சால்வை போடவேண்டும். உங்கள் ஆலோசனை வேண்டுமென்று 10 பேர் கேட்க வேண்டும். உங்களால் தான் எல்லாம் என்று சிலர் சொல்ல வேண்டும். இவ்வளவு தான், இவர்கள் எதிர்பார்க்கும் பலனே. இது ஒருவகையான சிற்றின்பம், மனநோய்.

தங்கள் பிள்ளைக்கு நம் சாதியிலேயே திருமணம் செய்துவைக்க இதுபோன்ற சங்கங்கள் பயன்படுமா என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் இங்கு வளரும் பெரும்பாலான குழந்தைகள், சாதி மறுப்பு திருமணம் தான் செய்கிறார்கள். அதைப் பெற்றோர்களால் பெரிதாகத் தடுக்கவும் இயலாது என்பதால் அதற்கான வாய்ப்பில்லை.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் , எந்த ஊருக்குப் போனாலும் நான் தான் பெரிய மனுசனா இருக்கவேண்டும். அதான் எனக்கு வேண்டும் அதற்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன், இந்த மன நிலை தான் இங்குள்ள சாதிச் சங்கங்களின் முக்கிய முதலீடு.

– Tholar Panther

A1TamilNews.com

From around the web