விஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்?

மாஸ்டர் படத்திற்குப் பிறகு அடுத்ததாக விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “மாஸ்டர் “ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஏப்ரல் – மே மாதம் கோடை விடுமுறை விருந்தாக வரும் வகையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த விஜய் படத்தை இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் இயக்குவாரா
 

விஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்?மாஸ்டர் படத்திற்குப் பிறகு அடுத்ததாக விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்  “மாஸ்டர் “ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஏப்ரல் – மே மாதம் கோடை விடுமுறை விருந்தாக வரும் வகையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த விஜய் படத்தை இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் இயக்குவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. விஜய்யும், பார்த்திபனும் இருக்கும் ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு ரசிகர் இருவரும் இணைந்தால் செம மாஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு பேருக்கும் அந்த் ட்வீட்டை டேக் செய்தும் உள்ளார்.

இதைக் கவனித்துள்ள பார்த்திபன் பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “Massக்கு MASTER-ஐ பிடிக்கும் Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.(‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-‘அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்) நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!” என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

நண்பன் படத்தை இயக்கச் சொன்னதாகவும், அழகிய தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னதாகவும் விஜய் பற்றி பார்த்திபன் கூறியுள்ளது இது வரையிலும் வெளியே தெரியாத புதிய தகவலாகும். ஏற்கனவே விஜய் பட இயக்குனராக வேண்டியது தள்ளிப்போகி விட்டது என்று குறிப்பிடும் வகையிலும் பார்த்திபனின் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒத்த செருப்பு படத்தின் மூலம் உலக அளவில் கவனத்தை இயக்குனராக தன் பக்கம் திருப்பியுள்ள பார்த்திபன் அடுத்த விஜய் படத்தை இயக்கினால் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

http://A1TamilNews..com

From around the web