இளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்?

தமிழ் மொழிக்கான பங்களிப்பில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளவர் இசைஞானி இளையராஜா. அவர் இசையமைத்தது பெரும்பாலும் திரைப்படங்களுக்கே என்றாலும் அவருடைய இசையால் தமிழ் மொழி மேலும் மேலும் நேசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தி மொழி தமிழ்நாட்டை இசையால் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரம் அதை வேறோடு சாய்த்து, தமிழை ஓங்கி ஒலிக்கச் செய்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி, சிம்பொனி இசை, திருவாசகம் என அவருடைய இசைப் பணி எல்லையில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. இசைஞானி என்ற பெயரிலேயே
 

இளையராஜா எப்படி “இசைஞானி”  ஆனார்?மிழ் மொழிக்கான பங்களிப்பில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளவர் இசைஞானி இளையராஜா. அவர் இசையமைத்தது பெரும்பாலும் திரைப்படங்களுக்கே என்றாலும் அவருடைய இசையால் தமிழ் மொழி மேலும் மேலும் நேசிக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக இந்தி மொழி தமிழ்நாட்டை இசையால் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரம் அதை வேறோடு சாய்த்து, தமிழை ஓங்கி ஒலிக்கச் செய்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி, சிம்பொனி இசை, திருவாசகம் என அவருடைய இசைப் பணி எல்லையில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.

இசைஞானி என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் அன்புடன் அழைக்கப்படுகிறார் இளையராஜா. எப்படி இந்தப் பெயர் அவருக்கு வந்தது. அதைச் சூட்டியவர் யார்? இதோ அவரே சொல்கிறார்.

”அவர் என்னை இசைஞானியாகப் பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத்தான் இருந்தது. அதுவே எனக்குப் பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த “வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது.’ ” சங்கீதக் கனவுகள்’ இரண்டு புத்தகங்களையும் படித்துக்கொண்டே வந்திருக்கிறார்.

கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களைப் படித்தது பற்றிச் சொன்னார். அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மீகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு “இசைஞானி’ என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்.

அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது, அவரிடம் “இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்’ என்றேன். “அது தெரியும். அதனால்தான் வைத்தேன்’ என்றார்.

அவர் வைத்த பெயர் அப்படியே மக்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்….!”

இளையராஜா குறிப்பிட்டுள்ள “அவர்” ஐந்து தடவை தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி தான். நாத்திகராக அறியப்பட்டாலும், ஆத்திகத்தையும் ஆன்மீகத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டு, ஆன்மீகவாதிகளையும் அரவணைத்துச் செல்பவர் கருணாநித் என்பதற்கு வாழும் இசைஞானியும் ஒரு சாட்சி!

இளையராஜா எப்படி “இசைஞானி”  ஆனார்?

இருவருக்கும் ஒரே நாள் தான் பிறந்தநாள். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதால், ஒரு நாள் முன்னதாக தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் இசைஞானி இளையராஜா!

இசைராஜா இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

#HBDIlaiyaraja 

A1TamilNews.com

From around the web